

சென்னை: மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக நுகர்வோர், பொதுமக்கள் தங்களது புகார்கள், குறைகள் மற்றும் இதர பிரச்சினைகளை தெரிவிக்கும் வகையில், டாஸ்மாக் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் ஆக.31-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-889-2015 மற்றும் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் 73977 20230 ஆகியவற்றைத் தொடர்புகொண்டு 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். மேலும், டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் மூலமும் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.