கேமரா இல்லாத போன்களுக்கு கோயில்களில் அனுமதி: அமைச்சர் ரமேஷ் விளக்கம்

சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் நுழைவாயில் அருகே கைபேசி பெட்டகம் அமைக்கப்பட்டு உள்ளது.படம்: எல்.சீனிவாசன்

சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் நுழைவாயில் அருகே கைபேசி பெட்டகம் அமைக்கப்பட்டு உள்ளது.படம்: எல்.சீனிவாசன்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் உள்ள 52 முக்​கியக் கோயில்​களில் செல்​போன் தடை நேற்று முதல் அமலுக்கு வந்​தது. கேமரா வசதி இல்​லாத சாதாரண செல்​போன்​களுக்கு இந்​தத் தடையி​லிருந்து விலக்கு அளிக்​கப்​படு​வ​தாக அமைச்​சர் விளக்​கம் அளித்​துள்​ளார்.

தமிழக இந்து சமய அறநிலை​யத் துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களின் புனிதத்​தன்​மை​யைப் பாது​காக்​க​வும், பக்​தர்​கள் எவ்​வித இடையூறுமின்றி தரிசனம் செய்​வதை உறுதி செய்​ய​வும் கோயில் வளாகத்​துக்​குள் செல்​போன் கொண்டு செல்ல ஏற்​கெனவே தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது. எனினும், பலர் தடையை மீறி புகைப்​படம் எடுப்​பது மற்​றும் ‘ரீல்​ஸ்’ செய்து சமூக வலை​தளங்​களில் பதி​விடு​வ​தால், முதற்​கட்​ட​மாக 52 முது​நிலைக் கோயில்​களில் இந்​தத் தடை நேற்று முதல் தீவிரப்​படுத்​தப்​பட்​டது.

சென்​னை​யில் புகழ்​பெற்ற திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயில், மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில், வடபழனி முரு​கன் கோயில் உள்​ளிட்ட இடங்​களில் நேற்று காலை முதல் அதி​காரி​கள் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர்.

கோயில் நுழைவு வாயில்​களில் ஒலிபெருக்கி மூலம் தடை பற்​றிய அறி​விப்​பு​கள் தொடர்ந்து வழங்​கப்​பட்​டன. பக்​தர்​களின் வசதிக்​காக கோயில் வாசல்​களி​லேயே அமைக்​கப்​பட்​டிருந்த செல்​போன் பாது​காப்பு அறை​யில் ரூ.5 கட்​ட​ணம் செலுத்தி பக்​தர்​கள் தங்​களது செல்​போனை ஒப்​படைத்து டோக்​கன் பெற்​றுக்​கொண்​டனர்.

செவ்​வாய்க்​கிழமை என்​ப​தால் வடபழனி முரு​கன் கோயில் உள்​ளிட்ட இடங்​களில் கூட்​டம் அதி​க​மாகக் காணப்​பட்​டது. கூட்ட நெரிசலைப் பயன்​படுத்தி தடையை மீறி செல்​போன் கொண்டு சென்ற பக்​தர்​களைப் பிடித்த அதி​காரி​கள், முதன்​முறை என்​ப​தால் எச்​சரிக்கை விடுத்து அனுப்​பினர்.

இதுகுறித்து கோயில் அதி​காரி​கள் கூறுகை​யில், “முதல் நாள் என்​ப​தால் எச்​சரிக்​கை​யுடன் விடு​கிறோம். மீண்​டும் தடையை மீறி​னால் செல்​போன்​கள் பறி​முதல் செய்​யப்​படும். மேலும், காவல்​துறை​யில் புகார் அளிக்​கப்​பட்டு அபராத​மும் விதிக்​கப்​படும்” எனத் தெரி​வித்​தனர்.

செல்​போன் தடை குறித்து இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ரமேஷ் தனது ‘எக்​ஸ்’ தளத்​தில், ‘பக்​தர்​கள் அமை​தி​ யான சூழலில் இறைவனைத் தரிசிக்​கவே இந்த நடை​முறை அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இறைவனின் திரு​வுரு​வங்​களை வீடியோ எடுப்​ப​தைத் தவிர்க்​கவே இந்த நடவடிக்​கை. எனவே, பொது​மக்​கள் தங்​களது கேமரா வசதி​யுடன் கூடிய செல்​போன்​களை வாக​னங்​களிலோ அல்​லது தங்​கி​யிருக்​கும் அறை​களிலோ வைத்​து​விட்டு வரு​மாறு கேட்​டுக்​கொள்​கிறோம். அதே​நேரம், புகைப்​படம் எடுக்​கும் வசதி இல்​லாத சா​தாரண செல்​போன்​களைக் கோயிலுக்​குள் கொண்​டு செல்​லத்​ தடை​யில்​லை” என்​று குறிப்​பிட்​டுள்​ளார்​.

<div class="paragraphs"><p>சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் நுழைவாயில் அருகே கைபேசி பெட்டகம் அமைக்கப்பட்டு உள்ளது.படம்: எல்.சீனிவாசன்</p><p></p></div>
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தார் முதல்வர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in