மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம்கள் மூலம் 2 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு

மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம்கள் மூலம் 2 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மாநக​ராட்​சி​யில் வெறி​நாய்க்​கடி நோய் (ரேபிஸ்) பாதிப்​பிலி ருந்து பொது​மக்​களை காக்​க​வும், ரேபிஸ் இல்லா சென்​னையை உரு​வாக்​க​வும் அனைத்து தெரு நாய்​களுக்​கும் ரேபிஸ் தடுப்​பூசி மற்​றும் அக, புற ஒட்​டுண்ணி மருந்து செலுத்​தும் மாபெரும் முகாம் கடந்த ஆக.11-ம் தேதி தொடங்​கப்​பட்​டது.

இந்த முகாம்​களில் திரு​வொற்​றியூர், மணலி, தண்​டை​யார்​பேட்டை மற்​றும் ராயபுரம் ஆகிய 4 மண்​டலங்​களி​லும் அனைத்து இடங்​களி​லும் உள்ள தெரு நாய்​களுக்​கும் ரேபிஸ் தடுப்​பூசி மற்​றும் அக, புற ஒட்​டுண்ணி நீக்​கும் மருந்து செலுத்​தப்​பட்​டுள்​ளது.

இதைத் தொடர்ந்​து, மாதவரம் மற்​றும் அம்​பத்​தூர் மண்​டலங்​களில் உள்ள அனைத்து தெருக்​கள், கல்வி நிறு​வனங்​கள், மருத்​து​வ​மனை​கள், உள்​ளிட்ட அனைத்து இடங்​களி​லும் உள்ள தெரு நாய்​களுக்​கும் ரேபிஸ் தடுப்​பூசி செலுத்​தப்​பட்டு வரு​கிறது.

இது​வரை 60,216 தெரு​நாய்​களுக்கு வெறி​நாய்க்​கடிநோய்த் தடுப்​பூசி மற்​றும் அக, புற ஒட்​டுண்ணி நீக்​கும் மருந்து செலுத்​தப்​பட்​டுள்​ளது. அதி​கபட்​ச​மாக தண்​டை​யார்​பேட்டை மண்​டலத்​தில் 12,684, அம்​பத்​தூர் மண்​டலத்​தில் 11,895 தெரு​நாய்​களுக்கு தடுப்​பூசி செலுத்​தப்​பட்​டுள்​ளது.

தற்​போது மாதவரம் மற்​றும் அம்​பத்​தூர் மண்​டலத்​தில் தலா 10 குழுக்​கள் மூலம் சிறப்பு முகாம்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. பிற மண்​டலங்​களி​லும் இந்த முகாம் நடத்​தப்​பட்​டு, 50 வேலை நாட்​களுக்​குள் அனைத்து மண்​டலங்​களி​லும் சுமார் 2 லட்​சம் தெரு நாய்​களுக்கு தடுப்​பூசி செலுத்​தப்பட உள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்பட்டுள்ளது.

மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம்கள் மூலம் 2 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு
சதுப்பு நிலத்தில் தடுப்பு சுவர் கட்டினால் பள்ளிக்கரணை பகுதியில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும்: சவுமியா அன்புமணி கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in