பிரதமரை வரவேற்க வராத முதல்வர்: தமிழிசை கண்டனம்

பிரதமரை வரவேற்க வராத முதல்வர்: தமிழிசை கண்டனம்
Updated on
1 min read

சென்னை: சென்னை வந்த பிரதமரை வரவேற்​காத முதல்​வர் ஸ்டா​லினுக்கு பாஜக மூத்த தலை​வர் தமிழிசை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவரது எக்ஸ் தள பதி​வில் கூறி​யது: தமிழகத்​தின் வளர்ச்​சிக்கு வலுசேர்க்​கும் வகை​யில், சுமார் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்​பிலான மக்​கள் நலத்​திட்​டங்​களை அர்ப்​பணிக்க வந்த பிரதமரை ஒட்​டுமொத்த தமிழக​மும் உற்​சாகத்​தோடு வரவேற்​கிறது.

ஆனால், முதல்​வர் பின்​பற்​று​வது எந்த வகை​யான கலாச்​சா​ரம்? முதல்​வர் நகருக்​குள் இருந்​தும் பிரதமரை வரவேற்கச் செல்​ல​வில்​லை.

தமிழக வளர்ச்சித் திட்​டங்​களை வழங்க வந்த பிரதமரை, முதல்​வர் வரவேற்​காமல் இருப்பது கண்​டிக்​கத்​தக்​கது தமிழகத்துக்கு திட்​டங்களை பிரதமர் நேரடி​யாகத் தொடங்கிவைக்​கும்போது, அதற்கு என்னபதில் சொல்​வது என்று தெரியாமல்​தான் முதல்​வர் இந்த விழா​வைத் தவிர்க்​கிறா​ரா? இவ்​வாறு கூறியுள்​ளார்​.

பிரதமரை வரவேற்க வராத முதல்வர்: தமிழிசை கண்டனம்
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி 9 மடங்காக அதிகரிப்பு: மதுரையில் பிரதமர் மோடி தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in