“வரலாறு படைத்தவர் செளகார் ஜானகி” - தமிழக ஆளுநர் புகழஞ்சலி

“வரலாறு படைத்தவர் செளகார் ஜானகி” - தமிழக ஆளுநர் புகழஞ்சலி
Updated on
1 min read

மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து வரலாறு படைத்தவர் செளகார் ஜானகி என தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கள் குறிப்பில், “தனியார் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் துயர் அடைந்தேன்.

பத்ம ஸ்ரீ, கலைமாமணி, நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள அவர், மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து வரலாறு படைத்துள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த பல கதாபாத்திரங்களை ஏற்று, அதில் தனக்கென தனி பாணியைக் கடைபிடித்து, 400-க்கும் அதிகமான படங்களில் நடித்து ஒரு சகாப்தத்தையே உருவாக்கினார் என்றால் அது மிகை இல்லை.

தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்து குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை செய்துள்ளார். 

அவரது மகள், பேத்தி, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைவனது திருவடியை அடைந்து விட்ட அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்பதை அவரின் ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“வரலாறு படைத்தவர் செளகார் ஜானகி” - தமிழக ஆளுநர் புகழஞ்சலி
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி மறைவு
“வரலாறு படைத்தவர் செளகார் ஜானகி” - தமிழக ஆளுநர் புகழஞ்சலி
‘அன்னை பிம்பம் விடைபெற்றது’ - செளகார் ஜானகிக்கு கமல் புகழஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in