‘அன்னை பிம்பம் விடைபெற்றது’ - செளகார் ஜானகிக்கு கமல் புகழஞ்சலி

‘அன்னை பிம்பம் விடைபெற்றது’ - செளகார் ஜானகிக்கு கமல் புகழஞ்சலி
Updated on
1 min read

‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ என்று செளகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடுள்ள இரங்கல் குறிப்பில், ‘‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பது ஆண்டு காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றி உள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்க இயலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி.

அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ என்று உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.

‘அன்னை பிம்பம் விடைபெற்றது’ - செளகார் ஜானகிக்கு கமல் புகழஞ்சலி
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி மறைவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in