அன்புமணிக்கு கால் மூட்டில் அறுவை சிகிச்சை - பாமக தகவல்

அன்புமணிக்கு கால் மூட்டில் அறுவை சிகிச்சை - பாமக தகவல்
Updated on: 
1 min read

சென்னை: அன்புமணி ராமதாசுக்கு வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள அவர் நலமுடன் இருப்பதாகவும் பாமக தெரிவித்துள்ளது.

இது குறித்து பாமக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி இராமதாஸின் வலது கால் மூட்டில் நேற்று சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு இன்று வீடு திரும்பிய அவர், நலமுடன் உள்ளார்.

அடுத்த இரு வாரங்களுக்கு பிசியோதெரபி சிகிச்சையும் ஓய்வும் எடுத்தக்கொள்ளும்படி மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புமணிக்கு கால் மூட்டில் அறுவை சிகிச்சை - பாமக தகவல்
தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராக சூழ்ச்சி - பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in