சென்னை, புறநகரை குளிர்வித்த திடீர் மழை

| படம்: ம.பிரபு |

| படம்: ம.பிரபு |

Updated on
1 min read

சென்னை: கடந்த ஒரு வார​மாக கடும் வெப்​பம் வாட்டி வதைத்து வந்த நிலை​யில் சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் குளிர்ச்சி நில​வியது.

வட தமிழகம் மற்​றும் கடலோர தமிழகத்​தில் தென்​மேற்கு பரு​வ​மழை​யின் தாக்​கம் இல்​லாத நிலை​யில், பல நாட்​களாக சென்​னை, புறநகர் பகு​தி​களில் குறிப்​பிடும் படி​யான மழைப்​பொழிவு இல்​லை.

கடந்த இரு வாரங்​களாக பகலில் கடும் வெயிலும், மாலை மற்​றும் இரவில் கடும் புழுக்​க​மும் நில​வியது. இதனால் பொது​மக்​கள் கடும் அவதிக்​குள்​ளா​யினர்.

இந்​நிலை​யில், நேற்று மாலை சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் பலத்த காற்​று, இடி, மின்​னலுடன் மித​மான மழை பெய்​தது. வில்​லி​வாக்​கத்​தில் 3 செமீ, நுங்​கம்​பாக்​கம், சோழிங்​கநல்​லூர், பூந்​தமல்​லி, செம்​பரம்​பாக்கம், மாதவரத்​தில் தலா 2 செமீ, புழலில் 1 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது.

மாலை நேரத்தில் மழை பெய்ததால் அலுவலகம் பணி முடித்து வீட்டுக்கு திரும்பியவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. எனினும், கடந்த 2 வாரங்​களாக கடும் வெப்​பத்​தால் அவதிக்​குள்​ளான மக்​கள், திடீர் மழை​யால் குளிர்ச்​சி​யான சூழலை அனுப​வித்​தனர்​.

<div class="paragraphs"><p>| படம்: ம.பிரபு |</p></div>
எம்எல்ஏ.வுக்கு ரூ.35 கோடி பேரம்: சிங்கப்பூர் நபருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in