தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: நிவாரணப் பணிகளில் ட்ரோன் பயன்படுத்த மாநகராட்சி நடவடிக்கை

ஆணை​யர் சமீரன் தகவல்
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: நிவாரணப் பணிகளில் ட்ரோன் பயன்படுத்த மாநகராட்சி நடவடிக்கை
Updated on: 
2 min read

சென்னை: வடகிழக்​குப் பரு​வ​மழை தீவிரமடைந்து வரும் நிலையில், நிவாரணப் பணிகளில் ட்​ரோன்​களைப் பயன்​படுத்த நட​வடிக்கை எடுத்து வரு​வ​தாக மாநக​ராட்சி ஆணை​யர் சமீரன் தெரி​வித்​துள்​ளார்.

வடகிழக்​குப் பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கை​யாக, மணலி மண்​டலம் ஆமுல்​லைவாயல் பாலம் பகுதி​யில் புழல் உபரிநீர் கால்​வாயில் ஆகாயத்​தாமரைகள் அகற்​றும் பணிகள், ட்ரோன் மூலம் கண்​காணிப்பு நட​வடிக்​கைகள், அம்​மண்​டலத்​தில் உள்ள கட்​டுப்​பாட்டு அறை, வெள்ள நிவாரண மையம் உள்ளிட்டவற்றை மாநக​ராட்சி ஆணை​யர் சமீரன் நேற்று நேரில் ஆய்வு செய்​தார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சென்​னை​யில் 219 இடங்​கள் மழைநீர் அதிக அளவில் தேங்​கும் தாழ்​வான பகுதிகளாக அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. அங்கு கண்​காணிப்​புக் கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்டு, மழைநீர் தேக்​கம், மக்களின் பாதிப்பு நிலை குறித்து நேரலை​யில், கட்​டுப்​பாட்டு அறை​யில் இருந்தே கண்​காணிக்க முடியும். அது​மட்​டுமல்​லாமல் ஒவ்​வொரு மண்​டலத்​திலும் 2 ட்​ரோன்​களை ஏற்​பாடு செய்து, அந்த ட்​ரோன்​கள் மூலமாக வாக​னங்​கள் உள்ளே அல்​லது உடனே போக முடி​யாத வெள்​ளநீர் பாதித்த பகுதி​களை ட்​ரோன் மூலமாக அணுகி, கண்​காணிப்பு மற்​றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இன்று இப்பணிகள் சோதித்​தும் பார்க்​கப்​பட்​டது. ட்​ரோன் காட்​சிகள், கட்டுப்​பாட்டு அறை​யில் இருந்​தவாறே கண்​காணிக்​கப்​பட்​டன.

தற்​போது விட்​டுவிட்டு மழை பெய்து வரு​கிறது. இது டெங்கு பரவலுக்கு சாதக​மான சூழல். அத​னால் 3700 மலேரியா பணியாளர்​கள் களமிறக்​கப்​பட்டு, தீவிர கொசு உற்​பத்தி ஆதாரங்களை கண்​டறிந்து அழிக்​கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு​கின்​றன. புகை பரப்​பும் பணிகளும் நடை​பெற்று வரு​கின்​றன. தினமும் 106 இடங்​களில் மருத்​துவ முகாம்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. இது​வரை 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயன்​பெற்​றுள்​ளனர்.

சென்னை புறநகர் நீர்ப்​பி​டிப்பு பகுதி​யில் பெய்து வரும் மழை, பூண்டி, புழல், செம்​பரம்​பாக்​கம், தேர்​வாய்​கண்​டிகை போன்ற அனைத்து ஏரி​களி​லும் நீர் இருப்பு நில​வரம் நேரலை​யில் கண்​காணிக்​கப்​பட்டு வரு​கிறது. நிவாரண பணிகளில் ஈடு​பட, 7 ஆயிரம் தன்​னார்​வலர்​கள் பதிவு செய்​துள்​ளனர். தேவைப்​பட்​டால் 15 ஆயிரம் பேர் வரை பதிவு செய்ய திட்​ட​மிட்​டிருக்​கிறோம். 113 இடங்​களில் படகு​கள் தயார் நிலை​யில் உள்​ளன. இதை 250 ஆக உயர்த்த திட்​ட​மிட்​டிருக்​கிறோம். இவ்​வாறு அவர் கூறினார்.

15 கட்டுப்பாட்டு அறைகள்: வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அந்தந்த மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இதர புகார்கள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

திருவொற்றியூர்- 94451 90201, மணலி- 94451 90202, மாதவரம்- 94451 90203, தண்டையார்பேட்டை- 94451 90204, 89258 19481, ராயபுரம்- 94451 90205, திருவிக நகர்- 94451 90206, அம்பத்தூர்- 94451 90207, அண்ணா நகர்- 94451 90208, தேனாம்பேட்டை- 94451 90209, கோடம்பாக்கம்- 94451 90210, வளசரவாக்கம்- 94451 90211, ஆலந்தூர்- 94451 90212, அடையாறு- 94451 90213, பெருங்குடி- 94451 90214, சோழிங்கநல்லூர்- 94451 90215.

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: நிவாரணப் பணிகளில் ட்ரோன் பயன்படுத்த மாநகராட்சி நடவடிக்கை
இந்து சமய அறநிலையத் துறையில் இணை ஆணையர்கள் 18 பேர் பணியிட மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in