ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்த்த மேல்​முறை​யீட்டை திரும்ப பெற உச்ச நீதி​மன்​றத்​தில் அரசு மனு

ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்த்த மேல்​முறை​யீட்டை திரும்ப பெற உச்ச நீதி​மன்​றத்​தில் அரசு மனு
Updated on
2 min read

புதுடெல்லி: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசா​ரணைக்கு மாற்​றிய உத்​தரவை எதிர்த்த மேல்​முறை​யீடு மனுவை திரும்ப பெற அனு​மதி கோரி உச்​சநீ​தி​மன்​றத்​தில் தமிழ்​நாடு அரசு மனு தாக்​கல் செய்​துள்​ளது.

பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராகப் பதவி வகித்த ஆம்​ஸ்ட்​ராங் 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பெரம்​பூரில் உள்ள தனது வீட்​டருகே ஒரு கும்​பலால் வெட்​டிப் படு​கொலை செய்​யப்பட்​டார். இந்த வழக்​கில் சிறை​யில் உள்ள பிரபல ரவுடி நாகேந்​திரன், அவரது மகனும், முன்​னாள் இளைஞர் காங்​கிரஸ் நிர்​வாகி​யு​மான வழக்​கறிஞர் அஸ்​வத்​தாமன், ரவுடி ஆற்​காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அஞ்​சலை, பல்​வேறு அரசி​யல் கட்​சிகளைச் சேர்ந்​தவர்​கள், 10 வழக்​கறிஞர்​கள், பெண்​கள் என மொத்​தம் 27 பேர் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டுச் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்த வழக்கை போலீ​ஸார் முறை​யாக விசா​ரிக்​க​வில்லை எனக்​கூறி ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் கீனோஸ் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம் ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசா​ரணையை சிபிஐக்கு மாற்றி உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை எதிர்த்து தமிழ்​நாடு அரசின் சார்​பில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுவை உச்ச நீதி​மன்​றம் விசா​ரிக்​கிறது.

இது தொடர்​பான மனுக்​களை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே. மகேஸ்​வரி, ஏ.எஸ்​.சந்​துருக்​கர் அடங்​கிய அமர்வு கடந்த மே 21-ம் தேதி விசா​ரித்​தது. தமிழ்​நாட்​டில் புதிய அரசு அமைந்​துள்​ள​தால் இந்த விவ​காரத்​தில் குறிப்​பாக சிபிஐ விசா​ரணை தொடர வேண்டுமா அல்​லது வேண்​டாமா என்பது குறித்து விளக்​கம் கேட்டு தெரிவிக்க விரும்​புவ​தாக அரசு தரப்பு வாதிட்​டதை பதிவு செய்து கொண்ட உச்ச நீதி​மன்​றம், விளக்​கம் கேட்டு தெரிவிக்க அனு​மதி அளித்​ததுடன் விசா​ரணையை ஜூலை மாதத்​துக்கு தள்ளி வைத்​தது.அது​வரை, ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு விதித்த இடைக்​கால தடை தொடரும் என்​றும் தெரி​வித்​தது.

இதனிடையே, தமிழ்​நாடு அரசின் சார்​பில் வழக்​கறிஞர் பி. கருணாகரன் தாக்​கல் செய்​துள்ள மனு​வில், ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. வி​சா​ரணைக்கு மாற்​றிய உத்​தரவை எதிர்த்​த மேல்​முறை​யீடு மனுவை திரும்​ப பெற அனு​மதி கோரப்பட்டுள்ளது.

திமுக அரசு மீது குற்​றச்​சாட்டு

இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சி முந்தைய திமுக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வர் பி.ஆனந்​தன் கூறிய​தாவது:

ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. ஆனால், உண்மை குற்​ற​வாளி​களை காப்​பாற்ற வேண்​டும் என்​ப​தற்​காக முந்​தைய திமுக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் 2 முறை முறை​யிட்டு தோல்வி அடைந்த பிறகும் விடா​மல் 3-வது முறை​யாக மேல்​முறை​யீடு செய்​து, சிபிஐ விசா​ரணைக்கு தடை பெற்​றது.

குற்​ற​வாளி​களைக் காப்​பாற்​றுவதற்​காக அரசு நிதியை வீணடித்து இந்த நடவடிக்​கையை திமுக அரசு மேற்​கொண்​டது. முன்​னாள் திமுக அமைச்​சர்​கள் சேகர்​பாபு, சா.​மு.​நாசர் ஆகியோ​ருக்கு குற்​ற​வாளி​களு​டன் தொடர்பு உள்​ள​தாக பல அரசி​யல் கட்சி தலை​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இந்த சூழலில், மேல்​முறை​யீட்டு வழக்கை தவெக அரசு வாபஸ் பெற முடிவு செய்துள்ளதற்காக, முதல்​வர் விஜய்க்கு நன்றி. நீதி கிடைக்​கும் என நம்​பு​கிறோம். இந்த கொலை வழக்​கில் தொடர்​புடைய அனைத்து குற்​ற​வாளி​களும் கைது செய்​யப்பட வேண்டும். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்த்த மேல்​முறை​யீட்டை திரும்ப பெற உச்ச நீதி​மன்​றத்​தில் அரசு மனு
7.5 சதவீத உள்ஒதுக்கீடு பொறியியல் சேர்க்கையில் 139 பேருக்கு ஆணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in