

சென்னை: பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 13-ந் தேதி நடந்தது.
இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டு அதை உறுதிபடுத்த 14-ம் தேதி மாலை 5 மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்த 139 மாணவர்களுக்கு நேற்று காலை 7 மணிக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் வழங்கப்பட்டது. அவர்களில் 91 பேர் மாற்றுத் திறனாளிகள். 38 பேர் விளையாட்டு வீரர்கள், 8 பேர் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆவர்.
இந்த நிலையில், சிறப்பு பிரிவினருக்கான இணைய வழி பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க மொத்தம் 4,927 பேர் தகுதிபெற்றுள்ளனர்.