மாநில கட்சிகள் Vs தேசிய கட்சிகள்: புதுச்சேரி அரசியல் களத்தில் ‘கெத்து’ யாரு?

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசமான புதுவை யில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் ஆட்சிதான் நடந்தது. அண்டை மாநிலமாக தமிழகம் இருந்தாலும், புதுவையில் காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்ததால் புதுவை மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்தனர். மத்தி யில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸூம் இதற்கு காரணம்.

யூனியன் பிரதேசமான புதுவையை செல்லப்பிள்ளையாக மத்திய காங்கிரஸ் கருதியது. இதனால் புதுவைக்கு தேவையான நிதி, சலுகைகளை வழங்கி வந்தது.

இருப்பினும் ஆண்டுகள் செல்லச் செல்ல புதுவைக்கு வழங்கிய நிதி குறைக்கப்பட்டது. இதனால் புதுவை அரசு சுய வருமானத்தை பெருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. அத்துடன் காங்கிரஸில் பிளவுகளும் ஏற்பட்டன.

இறுதியாக கடந்த 2011-ல் காங்கிரஸில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் உருவாகி ஆட்சியைப் பிடித்தது. புதுவையில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு செல்வாக் குடன் மாநில கட்சிகள் இல்லாத சூழலில் கடந்த 2011-ல் ரங்கசாமி என்ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சரிபாதி தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.

இதன்பிறகு புதுவைக்கு என செல்வாக்கு உள்ள மாநில கட்சியாக என்ஆர்.காங்கிரஸ் உருவெடுத்தது. 2016-ல் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்ட என்ஆர்.காங்கிரஸ் 8 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. 2021-ல் என்ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பாஜக இடம் பெற்றிருந்தது.

மத்திய பாஜக ஆட்சியைப் பயன்படுத்தி என்ஆர்.காங்கி ரஸ், புதுவையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது.

தேர்தலுக்கு நெருக்கத்தில் மக்களை கவரும் வகையில் சலுகைகளை வாரி வழங்கியது. இதனால் முதல்வர் ரங்கசாமியின் என்ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு செல் வாக்கு உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில் ஆட்சியில் பங்கு பெற்றிருந்தாலும், பாஜக தனது செல்வாக்கை மக்களிடையே உயர்த்தவில்லை. கட்சியின் பெரும் பாலான நிகழ்ச்சிகளை கட்சி அலுவலகத் துக்குள்ளேயே நடத்தி முடித்தனர். மக்களுடன் நேரடி தொடர்பை பாஜகவினர் ஏற்படுத்தாமல் இருந்தனர்.

பாஜகவுக்குள் மோதல், அமைச்சர்கள், எம்எல் ஏக்கள் மோதல், அமைச்சர், நியமன எம்எல்ஏக்கள் மாற்றம் என பல குழப்பங்களும் நிலவியது. இவையெல்லாம் பாஜகவின் செல்வாக்கை உயர்த்தவில்லை. மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந் தார்.

மத்தியில் 2014-ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி தொடர்ந்தாலும் புதுச்சேரியில் இதனால் தனித்து போட்டியிடும் அளவுக்கு பாஜக இன்னும் வலுப்பெறவில்லை.

இதனால்தான், ‘என்ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி தேவை’ என்ற நிலைக்கு புதுவை மாநில பாஜக தள்ளப்பட்டு என்.ஆர்.காங்கிரஸ் ஒப்புதலுக்காக மத்திய அமைச்சர் காத்திருக்கும் சூழல்தான் நிலவுகிறது. புதுச்சேரியில், காங்கிரஸின் நிலைமையோ வேறு மாதிரியாக இருக்கிறது.

தொடர்ந்து காங்கிரஸ் வசம் இருந்த புதுச்சேரியில் கடந்த 2016-ல் புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கி ரஸ் அரசு அமைந்தது. இந்த ஆட்சிக்காலத்தில் மத்திய பாஜக, துணைநிலை ஆளுநர் மோதலால் புதுச் சேரியில் பலதிட்டங்கள் செயல்பாட்டுக்கு வராமல் போனது.

இந்த நிலையில் என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி 2021 தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் ஆட்சியின் மீது அதிருப்தியில் இருந்த மக்கள் என்ஆர்.காங்கிரஸ், பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனர். காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வென்றது.

கூட்டணியில் இருந்த மாநிலக்கட்சியான திமுக 6 இடங்களில் வென்று எதிர்க்கட்சியானது. அத்துடன் புதுச்சேரியில் கட்சியை பலப்படுத்தத் தொடங்கியது. அதேநேரத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ் வளர்ச்சி அதிகளவில் இல்லை.

பல மாநில தோல்வி புதுச்சேரி காங்கிரஸையும் பாதித்தது. இதனால் தேசிய கட்சியான காங்கிரஸ் தான்தான் பெரிய கட்சி என புதுவையில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த மக்களவைத் தேர்த லில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் உதவியால் வென்றது.

அதைத் தொடர்ந்த நாட்களிலும் கட்சியைத் தொகுதி தோறும் வளர்ப்பதிலும் சிறிது தொய்வுதான் இருந்தது. தற்போது என்ஆர்.காங்கிரஸ், திமுக ஆகிய மாநில கட்சிகளின் எழுச்சியால் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸூம் மாநில கட்சிகளைச் சார்ந்தே இருக்கின்றன.

அவர்களின் கெடுபிடியால் தொகுதி பங்கீட்டில் கடந்த நாட்களில் சிக்கல் நீடித்து, நேற்று என்டிஏ கூட்டணியில் ஒரு முடிவு ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில் புதுச்சேரியில் மாநிலக் கட்சிகளின் வளர்ச்சி தொடரவே செய்கிறது. அவர்களைச் சார்ந்தே தேசிய கட்சிகளின் செயல்பாடு இருக்கிறது.

மாநில கட்சிகள் Vs தேசிய கட்சிகள்: புதுச்சேரி அரசியல் களத்தில் ‘கெத்து’ யாரு?
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in