இடதுசாரி கொள்கைகளை முன்னிறுத்தி திருச்சியில் அக்.6-ல் மாநில அளவில் பேரணி

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு
இடதுசாரி கொள்கைகளை முன்னிறுத்தி திருச்சியில் அக்.6-ல் மாநில அளவில் பேரணி
Updated on
1 min read

சென்னை: இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர் களிடம் அவர்கள் கூறியதாவது:

மு.வீரபாண்டியன்: ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட, தொடர்ந்துகூட்டியக்கங்களை நடத்த இடதுசாரிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளோம்.

முதலாளித்துவத்தில் இருந்து இந்த தேசத்தை சோசியலிசத்தின் பக்கம் நகர்த்துகிற போராக அது அமையும்.

பெ.சண்முகம்: இடதுசாரி கொள்கைகளை முன்னிறுத்தி மாநில அளவில் பேரணியை திருச்சியில் அக்.6-ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளோம். போராடுகிற உரிமையை எந்த அரசாங்கம் தடுத்தாலும் நாங்கள் எதிர்ப்போம்.

பழ.ஆசைத்தம்பி: பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தவெக அளித்திருந்தது. அந்த வகையில் தவெக அரசின் முதல் பட்ஜெட்டை மக்கள் மட்டுமல்ல; நாங்களும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினர்.

இடதுசாரி கொள்கைகளை முன்னிறுத்தி திருச்சியில் அக்.6-ல் மாநில அளவில் பேரணி
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்: தவெக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in