செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம்: ஸ்ரீரங்கம் எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

பழனி​யாண்​டி​

பழனி​யாண்​டி​

Updated on
1 min read

கரூர்: குளித்​தலை அருகே கல் குவாரி​யில் செய்​தி​யாளர்​கள் மீது தாக்​குதல் நடத்​திய வழக்​கில், ஸ்ரீரங்கம் திமுக எம்​எல்ஏ, தனது மகனுடன் கரூர் நீதி​மன்​றத்​தில் நேற்று சரணடைந்​தார்.

கரூர் மாவட்​டம் குளித்​தலையை அடுத்த அய்​யர்​மலை அருகே ஸ்ரீரங்கம் எம்​எல்ஏ பழனி​யாண்​டி​யின் மகன் விமலா​தித்​தனுக்கு சொந்​த​மான கல் குவாரி உள்​ளது.

இங்கு விதி​களை மீறி கல் வெட்டி எடுக்​கப்​படு​வ​தாக கிடைத்த தகவலின்​பேரில், கடந்த ஜன. 30-ம் தேதி திருச்​சியை சேர்ந்த தனி​யார் தொலைக்​காட்சி செய்​தி​யாளர் கதிர​வன்​(45), ஒளிப்​ப​தி​வாளர் செபாஸ்​டின்​(47) உள்​ளிட்​டோர் செய்தி சேகரிக்​கச் சென்​றுள்​ளனர்.

அப்​போது, எம்​எல்ஏ பழனி​யாண்​டி, அவரது மகன் விமலா​தித்​தன் மற்​றும் கல் குவாரி ஊழியர்​கள் 10-க்​கும் மேற்​பட்​டோர் தங்​களைத் தாக்​கி, கேம​ரா, செல்​போன்​களை பறித்து விட்​ட​தாக குளித்​தலை போலீ​ஸில் கதிர​வன் புகார் அளித்​தார். அதே​போல, செய்​தி​யாளர் தரப்​பினர் தங்​களை தாக்​கிய​தாக எம்​எல்ஏ பழனி​யாண்​டி​யின் மகன் விமலா​தித்​தன் தரப்​பிலும் புகார் அளிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, கதிர​வன் அளித்த புகாரின்​பேரில் எம்​எல்ஏ பழனி​யாண்​டி, அவரது மகன் விமலா​தித்​தன் உள்​ளிட்​டோர் மீது, ஆபாச​மாகத் திட்டி தாக்​கியது உள்​ளிட்ட 4 பிரிவு​களி​லும், விமலா​தித்​தன் அளித்த புகாரின்​பேரில் செய்​தி​யாளர் கதிர​வன், ஒளிப்​ப​தி​வாளர் செபாஸ்​டின் உள்​ளிட்​டோர் மீது அத்​து​மீறி நுழைந்து தாக்​கியது உள்​ளிட்ட 4 பிரிவு​களி​லும் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரித்து வந்​தனர்.

இந்​நிலை​யில், கரூர் ஜூடீசி​யல் மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றம் எண்​.1-ல் மாஜிஸ்​திரேட் பரத்​கு​மார் முன்​னிலை​யில் எம்​எல்ஏ பழனி​யாண்​டி, அவரது மகன் விமலா​தித்​தன் உள்​ளிட்ட 3 பேர் நேற்று சரணடைந்​து, பிணை உத்​தர​வாதம் அளித்​தனர். இதையடுத்து அவர்​கள் ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டனர்.

<div class="paragraphs"><p>பழனி​யாண்​டி​</p></div>
மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று திருச்சி வருகை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in