உள்நாட்டு போரின்போது கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் நகைகளை ஒப்படைக்க முடிவு: இலங்கை அமைச்சர் தகவல்

இலங்​கை பாதுகாப்பு இணை​யமைச்​சர் அருண ஜயசேகர தெரிவித்தார்

இலங்​கை பாதுகாப்பு இணை​யமைச்​சர் அருண ஜயசேகர தெரிவித்தார்

Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்​கை​யில் 2009-ல் உள்​நாட்டு போர் நடந்​த​போது விடு​தலைப் புலிகளிடம் இருந்து கைப்​பற்​றப்​பட்ட தங்க நகைகள் நீதிமன்​றத்​தில் 3 மாதங்​களுக்​குள் ஒப்​படைக்​கப்​படும் என அந்நாட்டு பாதுகாப்பு இணை​யமைச்​சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

விடு​தலைப் புலிகள் தங்​களின் ஆயுதம் மற்​றும் இதர தளவாடங்களை வாங்​க தங்​கத்​தைப் பரி​மாறிக் கொண்​டனர். இலங்​கை​யில் உள்​நாட்டு யுத்​தம் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்​த​ போது விடு​தலைப் புலிகள் சேகரித்து வைத்​திருந்த சுமார் 6 ஆயிரம் கிலோ தங்​கம் ராணுவத்​தால் கைப்​பற்​றப்​பட்​ட​தாக சொல்​லப்​படு​கிறது. ஆனால் அந்​தத் தங்​கம் எங்கே என்ற விவரம் தெரிய​வில்​லை.

இலங்​கை​யில் விடு​தலை புலிகளின் தங்​கம் புதைக்​கப்​பட்ட இடங்​களை பல ஆண்​டுகளாக ராணுவம் தேடி வருகிறது. இந்​நிலை​யில் தமிழரசுக் கட்​சி​யின் யாழ்ப்​பாணம் நாடாளு​மன்ற உறுப்​பினர் சிவ​ஞானம் ஸ்ரீதரன் விடு​தலை புலிகளிட​மிருந்து கைப்​பற்​றப்​பட்ட தங்​கம் குறித்து அந்​நாட்டு நாடாளு​மன்​றத்​தில் கேள்வி எழுப்பியிருந்​தார். இதற்கு இலங்கை பாது​காப்​புப் இணை​யமைச்​சர் அருண ஜயசேகர அளித்த பதில்:

விடு​தலைப் புலிகளிட​மிருந்து கைப்​பற்​றப்​பட்ட தங்க நகைகளை 3 மாத காலத்​துக்​குள் நீதி​மன்​றத்​தில் ஒப்​படைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். தமிழ் மக்​களிட​மிருந்து தங்க நகைகள் எதை​யும் கைப்​பற்​ற​வில்​லை. புலிகளின் களஞ்​சி​யச் சாலைகளில் இருந்து 150 கிலோ தங்கம் கைப்​பற்​றப்​பட்​டன.

அதேசம​யம், அந்த நகைகளின் உரிமை​யாளர்​ விவரம் தொடர்பாக எவ்​விதத் தகவல்​களும் கிடை​யாது. முன்​ன​தாக 2014-ல் அடை​யாளங்​கள் மற்​றும் ஆவணங்​களை உறு​திப்​படுத்​திய 2,015 தமிழர்களுக்கு அவர்​களது நகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.

<div class="paragraphs"><p>இலங்​கை பாதுகாப்பு இணை​யமைச்​சர் அருண ஜயசேகர தெரிவித்தார்</p></div>
பழநி கோயிலில் விரைவு தரிசனத்துக்காக ரூ.3,000 லஞ்சமாக பெற்ற காவலாளிகள் 3 பேர் பணி நீக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in