

சென்னை: சென்னையில் இருந்து போடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி செல்லும் ரயில்கள் உட்பட 14 சிறப்பு ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்: தாம்பரம்-போடி சிறப்பு ரயில் (06059) செப்.12-ல் இருந்து செப்.26 வரை 3 சேவைகளும், மறுமார்க்கத்தில் போடி - தாம்பரம் சிறப்பு ரயில் (06060) செப்.13-ல் இருந்து செப்.27 வரை 3 சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06045) செப்.4-ல் இருந்து செப்.25 வரை 4 சேவைகளும், மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி - எழும்பூர் சிறப்பு ரயில் (06046) செப்.6-ல் இருந்து செப்.27 வரை 4 சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
போத்தனூர்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயிலின் (06028) 12 சேவைகளும், மறுமார்க்கத்தில் (06027) 12 சேவைகளும் செப்.4-ல் இருந்து செப்.27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06070) செப்.3-ல் இருந்து செப்.24 வரை 4 சேவைகளும், மறுமார்க்கத்தில் தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06069) செப்.4-ல் இருந்து செப்.25 வரை 4 சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன.