ஓய்வூதியம், பணிநிரந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக - அதிமுக தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டம்

ஓய்வூதியம், பணிநிரந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக - அதிமுக தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டம்
Updated on
1 min read

சென்னை: ஓய்​வூ​தி​யம், பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி திமுக - அதி​முக தொழிற்​சங்​கங்​கள் இணைந்து வேலைநிறுத்த போராட்​டத்​தில் ஈடு​பட​வுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

சட்​டப்​பேரவை தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது அரசு ஊழியர்​களுக்​கான முழு​மை​யான பழைய ஓய்​வூ​திய திட்​டம் பரிசீலிக்​கப்​படும், அரசு பணி​யாளர்​களுக்கு நலவாரி​யம். தற்​காலிக பணி​யாளர்​களுக்கு நிரந்​தரப்​பணி என தவெக சார்​பில் தேர்​தலில் வாக்​குறு​தி​கள் அளிக்​கப்​பட்​டன.

தற்​போது முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசு அமைந்து 100 நாட்​களை கடந்த நிலை​யிலும் தங்​களின் கோரிக்​கைகள் குறித்து அறி​விப்​பு​கள் வெளி​யா​காத​தால் தொழிற்​சங்​கங்​கள் அதிருப்தி அடைந்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

அதன் வெளிப்​பா​டாக, டாஸ்​மாக் பணி​யாளர்​கள் கால​முறை போராட்​டத்தை அறி​வித்து பின்​னர் அமைச்​சருட​னான பேச்​சு​வார்த்​தைக்கு பின் வேலைநிறுத்த போராட்​டம் தற்​காலிக​மாக தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளன.

இதில் சட்​டப்​பேர​வை​யில் திங்கள்கிழமை நடை​பெறவுள்ள மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்​வுத் துறை மீதான மானிய கோரிக்​கை​யில் முக்​கிய முடிவு​கள் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இவை ஒரு புறமிருக்க போக்கு​வரத்து தொழிலா​ளர்​கள் காலிப்​பணி​யிடங்​கள் நிரப்​புதல், அகவிலைப்​படி உயர்வை நிலு​வை​யுடன் வழங்க வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி வேலைநிறுத்​தப் போராட்​டத்தை முன்​னெடுக்​க​வுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

குறிப்​பாக, கடந்த 2021-ம் ஆண்டு அதி​முக ஆட்​சி​யில் தொமுச, சிஐடியு ஆகிய சங்​கங்​கள் 25 சதவீத ஊதிய உயர்வை கோரின. இதன் பின்​னர் திமுக ஆட்​சிக்கு வந்​ததும் 5 சதவீத ஊதிய உயர்வு வழங்​கியது. இதற்கு சிஐடியு உள்பட பல சங்​கங்​கள் உடன்​பட​வில்​லை.

அதே​போல், கடந்த 2025-ம் ஆண்டு 15-வது ஊதிய ஒப்​பந்​தத்​தின்​படி மே.9-ம் தேதி 6 சதவீத உயர்வை அறி​வித்து அரசு உத்​தரவு பிறப்​பித்​தது. 3 ஆண்​டு​களுக்கு ஒரு முறை ஊதிய ஒப்​பந்​தம் செய்​யப்​படு​வது வழக்​கம். ஆனால் திமுக அரசு அதனை 4 ஆண்​டாக அதி​கரித்​தது. தற்​போது 16-வது ஊதிய ஒப்​பந்​தம் செப்​.1-ம் தேதி 2027ம் ஆண்டு நடை​முறைக்கு வரும்.

இந்​நிலை​யில் விரை​வில் பண்​டிகை நாட்​கள் வரவுள்​ள​தால் மற்ற தொழிற்​சங்​கங்​களின் ஒருங்​கிணைப்​புடன் திமுக மற்​றும் அதி​முக தொழிற்​சங்​கங்​கள் சார்​பில் கோரிக்​கைகளை வலி​யுறுத்தி வேலைநிறுத்​தப் போராட்​டத்தை முன்​னெடுக்க திட்​ட​மிட்டு வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது. இதனால், போக்​கு​வரத்து ஊழியர்​கள் போராட்​டத்தை முன்​னெடுக்​கும் பட்​சத்​தில் அரசுக்கு அது நெருக்​கடியை உண்​டாக்​கும் என அரசி​யல்​ விமர்​சகர்​கள்​ கருத்​துகளை தெரி​வித்​துள்​ளனர்​.

ஓய்வூதியம், பணிநிரந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக - அதிமுக தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டம்
ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் சக்தியாவதை தடுப்பதற்காக விசிக விமர்சிக்கப்படுகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in