‘பஞ்ச பரிவர்த்தன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’

ஆர்எஸ்எஸ் தமிழ்நாடு - கேரளா பொறுப்பாளர் பா.பிரகாஷ் கோரிக்கை
சம்ஸ்கார் பாரதி சென்னை மாநகர் அமைப்பு சார்பில், சங்கரதாஸ் சுவாமிகள் ஜெயந்தி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் மேடை நாடக கலைஞர்கள் டி.கே.எஸ்.கலைவாணன், பாம்பே ஞானம் ஆகியோரை திரைப்பட நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். தமிழ்நாடு-கேரளா ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் பா.பிரகாஷ், மாநில கவுரவத் தலைவர் நாராயபட், மாநகரத் தலைவர் செல்லா வைத்தியநாதன். மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநில இலக்கியப் பிரிவு பொறுப்பாளார் பத்மா மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

சம்ஸ்கார் பாரதி சென்னை மாநகர் அமைப்பு சார்பில், சங்கரதாஸ் சுவாமிகள் ஜெயந்தி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் மேடை நாடக கலைஞர்கள் டி.கே.எஸ்.கலைவாணன், பாம்பே ஞானம் ஆகியோரை திரைப்பட நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். தமிழ்நாடு-கேரளா ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் பா.பிரகாஷ், மாநில கவுரவத் தலைவர் நாராயபட், மாநகரத் தலைவர் செல்லா வைத்தியநாதன். மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநில இலக்கியப் பிரிவு பொறுப்பாளார் பத்மா மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

படம்: ம.பிரபு

Updated on
1 min read

சென்னை: குடும்ப ஒற்​றுமை, சமூக நல்​லிணக்​கம் உள்பட பஞ்ச பரிவர்த்​தன் மூலம் சமூக மாற்​றத்தை ஏற்​படுத்த வேண்​டும் என ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் தமிழ்​நாடு- கேரளா பொறுப்​பாளர் பா.பிர​காஷ் பொது​மக்​களுக்கு கோரிக்கை விடுத்​துள்​ளார்.

சென்னை தி.நகரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் பள்​ளி​யில் சம்ஸ்கார் பாரதி இயக்​கம் (சென்னை மாநகர்) சார்​பில் சங்கரதாஸ் சுவாமிகள் ஜெயந்தி விழா நடை​பெற்​றது. சிறப்பு விருந்​தின​ராக நடிகர் ஒய்​.ஜி. மகேந்​திரன், ஆர்​எஸ்​எஸ் தமிழ்​நாடு- கேரளா பொறுப்​பாளர் பா.பிர​காஷ் ஆகியோ​ரும், சமஸ்​கார் பாரதி இயக்​கத்​தின் மாநில தலை​வர் தாட்​சாயணி ராமச்சந்திரன், மாநகர தலை​வர் வைத்​தி​ய​நாதன் உள்ளிட்டோரும் பங்​கேற்​றனர். இதில் டி.கே.எஸ். கலை​வாணன், பாம்பே ஞானம் ஆகியோ​ருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த விழா​வில், பா.பிர​காஷ் பேசும்​போது, “சம்​ஸ்​கார் பாரதி இயக்​கம் காஷ்மீர் முதல் கன்​னி​யாகுமரி வரை இயங்கி வரு​கிறது. பல்​வேறு மாநிலங்​களில் உள்ள கலைகளை ஒன்​றிணைத்து அதன் மூலம் சமூக ஒற்​றுமையை உரு​வாக்​கும் பணியை சம்​ஸ்​கார் பாரதி செய்து வரு​கிறது. தமிழகம் கலைகளின் வளமான பூமியாகும். எனவே, இச்​சமூகத்​தில் சிறிய மாற்​றங்​களை ஏற்படுத்தும் வகை​யில், ‘பஞ்ச பரிவர்த்​தன்’ எனப்​படும் 5 முக்​கிய விஷயங்களை ஒவ்​வொரு​வரும் தங்​கள் வாழ்க்​கை​யிலும், குடும்பத்​தி​லும் நடை​முறைப்​படுத்த வேண்​டும்.

அதாவது, குடும்ப ஒற்​றுமை, சமூக நல்​லிணக்​கம், சுற்​றுச்​சூழல் - பாது​காப்​பு, தாய்​மொழி​யில் பேசுதல், குடிமக்​கள் கடமை​கள் ஆகிய​வற்றை பின்​பற்ற வேண்​டும். இந்த ஐந்து விஷ​யங்​களை​யும் முதலில் நமது வாழ்க்​கை​யில் பழக்​கப்​படுத்த வேண்​டும். பின்​னர் குடும்​பத்​தினரிட​மும், அதன் மூலம் சமூகத்​தி​லும் இந்த நடை​முறை​களை கொண்டு வர வேண்​டும். அதன்​படி தொடர்ந்து அடுத்த 5 ஆண்​டு​களில் அனை​வரும் ஒன்​றிணைந்து செய்து வந்தால் இந்​தி​யா​வில் மிகப்​பெரிய சமூக மாற்​றத்தை ஏற்​படுத்த முடியும்” என்​றார்.

விழா​வில் ஒய்​.ஜி.மகேந்​திரன் பேசும்​போது, “சினி​மா​வில் சம்பாதித்த பிறகு வில​கு​வது​போல் நாடகக் கலைஞர்​கள் விலகுவதில்​லை. கலைக்​காக உயிரை​யும் கொடுக்​கத் தயா​ராக இருப்​பவர்​கள்​தான் நாடகக் கலைஞர்​கள். எனவே, சம்​ஸ்​கார பாரதி போன்ற அமைப்​பு​கள் நாடகக் கலைஞர்​களை தொடர்ந்து ஊக்​குவிக்க வேண்​டும். கலைஞர்​களுக்கு திறமை​யுடன் பணிவு, எளிமை ஆகிய​வை​யும் அவசி​யம்.

‘எல்​லாம் தெரிந்​து​விட்​டது, எல்​லா​வற்​றை​யும் பார்த்​து​விட்​டோம்’ என்ற எண்​ணம் வந்​து​விட்​டால் அடுத்த கட்​டத்​துக்கு செல்ல முடியாது. தொடர்ந்து கற்​றுக்​கொள்​ளும் மனப்​பான்மை இருக்க வேண்​டும். நமது இந்து கலாச்​சா​ரம், சனாதன தர்​மத்​தின் நல்ல கருத்​துகளை மறந்​து​விடக் கூடாது. விமர்​சனங்​கள், சர்ச்​சைகளை விட்​டு​விட்​டு நல்​ல விஷ​யங்​களைப்​ பேச வேண்​டும்​” என்​றார்​.

<div class="paragraphs"><p>சம்ஸ்கார் பாரதி சென்னை மாநகர் அமைப்பு சார்பில், சங்கரதாஸ் சுவாமிகள் ஜெயந்தி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் மேடை நாடக கலைஞர்கள் டி.கே.எஸ்.கலைவாணன், பாம்பே ஞானம் ஆகியோரை திரைப்பட நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். தமிழ்நாடு-கேரளா ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் பா.பிரகாஷ், மாநில கவுரவத் தலைவர் நாராயபட், மாநகரத் தலைவர் செல்லா வைத்தியநாதன். மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநில இலக்கியப் பிரிவு பொறுப்பாளார் பத்மா மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.</p></div>
“புதிய தலைமைச் செயலக திட்டத்தை கைவிடாவிட்டால் மீனவ மக்களை திரட்டி போராட்டம்” - சீமான் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in