சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழரை மீட்க வேண்டும்: வெளியுறவு அமைச்சருக்கு எஸ்.ஜி.சூர்யா கோரிக்கை

அனோஜன் சிவ​ரா​சா, எஸ்.ஜி.சூர்யா

அனோஜன் சிவ​ரா​சா, எஸ்.ஜி.சூர்யா

Updated on: 
2 min read

சென்னை: சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த தமிழரான அனோஜன் சிவ​ரா​சாவை மீட்க வேண்டி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கையை சேர்ந்த 24 வயது தமிழரான அனோஜன் சிவ​ரா​சா, சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளார். வரும் 17-ம் தேதியோடு அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சட்ட ரீதியாக மேல் முறையீடு செய்வதற்கான கெடு முடிவடைகிறது. எனவே இந்த விவகாரத்தில் இந்திய அரசாங்கம் தலையிட்டு, அவரை மீட்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த செப்.28-ம் தேதிக்கு பிறகு அவரை அவரது குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும், அவர் சிறையில் தாக்குதலுக்கு ஆளானதாக தெரிகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு மற்றும் சவுதி அரேபியா இடையிலான இருதரப்பு உறவு அனைவரும் அறிந்தது. கடந்த 2019-ல் சவுதி சிறையில் இருந்த 850 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டனர். பிரதமர் மோடி, சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானை தொடர்பு கொண்டு இந்த மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டார். கடந்த 2024-ல் கத்தார் பிடியில் இருந்த 8 இந்திய கடற்படை அதிகாரிகளை மீட்டார்.

அந்த வகையில் இலங்கையை சேர்ந்த அனோஜன் சிவராசா வழக்கில் இந்தியா தலையிட்டு, அவரது தண்டனையை நிறுத்தி வைத்து, பாதுகாப்பாக நாடு திரும்ப உதவ வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

என்ன நடந்தது?

இலங்​கை​யின் யாழ்ப்​பாணத்தை சேர்ந்த இந்​துக்​கள் கடந்த ஜூன் மாதம் கதிர்​காமம் முரு​கன் கோயிலுக்கு புனித பாத யாத்​திரையை மேற்​கொண்​டனர். அவர்​களோடு சுப்பிரமணி​யம் என்று பெயரிடப்​பட்ட நாயும் சென்​றது. அந்த நாயை, முஸ்​லிம் இளைஞர் ஒரு​வர் தாக்​கி​னார். இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர் கைது செய்​யப்​பட்​டு ஜாமீனில் விடுதலையானார்.

ஆனால், இந்த விவ​காரம் இலங்கை சமூக வலை​தளங்​களில் பெரும் விவாதப்​பொருளாக மாறியது. இந்நிலையில், சவுதி அரேபி​யா​வில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவ​ரா​சாவும் சமூக வலைதள விவாதத்​தில் பங்​கேற்று பதிவு​களை வெளியிட்டு வந்​தார். அவர் தமிழில் பதிவிட்டுள்ளார். இருப்பினும் தனது செயலை எண்ணி வருந்திய அவர், சில நிமிடங்களில் அதை நீக்கி உள்ளார். மேலும், வருத்தம் தெரிவித்து வீடியோவும் வெளியிட்டார்.

இருப்பினும் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த இலங்கையை சேர்ந்த சிலர், அரபு மொழியில் அதை மொழிமாற்றம் செய்து, அனோஜன் சிவ​ரா​சா பணியாற்றிய நிறுவனம் மற்றும் சவுதி அரசு அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் செய்துள்ளனர். இதையடுத்து ஜூலை மாதம் அனோஜன் சிவ​ரா​சா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஐந்து ஆண்டு காலம் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அரசுத் தரப்பு மேல்முறையீட்டில் அவருக்கு ஷரியா சட்ட விதிகளின் படி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

<div class="paragraphs"><p>அனோஜன் சிவ​ரா​சா, எஸ்.ஜி.சூர்யா</p></div>
ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,280 குறைவு: சந்தை நிலவரம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in