“கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை பிரதமர் மோடி ‘ஹிட்’ கொண்டு விரட்டியடிப்பார்” - தமிழிசை

தமிழிசை

தமிழிசை

Updated on
1 min read

திருவண்ணாமலை: “கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை பிரதமர் மோடி 'ஹிட்' கொண்டு விரட்டியடிப்பார்,” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அதிமுகவில் எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தது குறித்து அவர்களது தொகுதி மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். மக்களின் தீர்ப்பை மதிக்காமல் பதவியை ராஜினாமா செய்தது தவறு; தவெக அதை ஊக்குவிப்பது அதைவிட மிக மிக தவறு.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை பிரதமர் மோடி 'ஹிட்' கொண்டு விரட்டியடிப்பார். இளைஞர்கள் மீது குறை சொல்வது தவறு. அவர்கள் ஆக்கப்பூர்வமாக இருக்கின்றனர். பிரதமர் மோடி நான்கு நாட்களுக்கு முன்னர், 51 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்கிறார்கள். கரோனாவையே எதிர்கொண்ட பிரதமர் மோடி, கரப்பான்பூச்சி கட்சியையும் எதிர்கொள்வார்” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>தமிழிசை </p></div>
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in