சட்டப்பேரவைத் தேர்தல் களைகட்டியது: ஸ்டாலின், விஜய், சீமான் மனுதாக்கல்

தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் குதித்தனர்
சட்டப்பேரவைத் தேர்தல் களைகட்டியது: ஸ்டாலின், விஜய், சீமான் மனுதாக்கல்
Updated on
2 min read

சென்னை: தமிழகத்​தின் 234 தொகு​தி​களி​லும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான வேட்​புமனு தாக்​கல் நேற்று தொடங்​கியது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், தவெக தலை​வர் விஜய், நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் ஆகியோர் முதல் நாளி​லேயே வேட்​புமனு தாக்​கல் செய்​தனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​.23-ம் தேதி ஒரே கட்​ட​மாக நடை​பெறும் என்று கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழு​வதும் தேர்​தல் நடத்தை விதி​கள் அன்​றைய தினமே அமலுக்கு வந்​தன. தலா 2,106 தேர்​தல் பறக்​கும் படைகள் மற்​றும் நிலைக் கண்​காணிப்பு குழுக்​கள் 24 மணிநேர​மும் தீவிர சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றன.

திமுக, அதி​முக கூட்​ட​ணி​கள் மற்​றும் தவெக, நாதக உள்ளிட்ட கட்​சிகளில் வேட்​பாளர்​கள் அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், தமிழகத்​தின் 234 தொகு​தி​களி​லும் நேற்றுவேட்​புமனு தாக்​கல் தொடங்​கியது. அதுதொடர்​பான அறிவிக்கை வெளி​யிடப்​பட்​டு, அரசிதழிலும் வெளி​யிடப்​பட்​டது. மனுத் தாக்​கலை​யொட்​டி, அனைத்து மாவட்​டங்​களி​லும் தேர்​தல் நடத்​தும் அலு​வலரின் அலு​வல​கத்​தில் இருந்து 100 மீட்​டர் தூரத்​தில் தடுப்​பு​ அமைத்​து, வேட்​பாளர்​களின் 3 வாக​னங்​கள் மட்​டும் உள்ளே அனு​ம​திக்​கப்​பட்​டன.

அலு​வல​கத்​தைச் சுற்றி அனைத்து பகு​தி​களும் முழு​மை​யாக சிசிடிவி கேமரா கண்​காணிப்​பில் கொண்டு வரப்​பட்​டுள்​ளன. அரசி​யல் கட்​சி​யினர் கூட்​ட​மாக வரு​வதை தடுக்க பல அடுக்கு தடுப்​பு​களும், போலீஸ் பாது​காப்​பு​களும் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

நேற்று காலை 11 மணிக்கு வேட்​புமனு தாக்​கல் தொடங்​கியது. சென்னை கொளத்​தூர் தொகு​தி​யில் முதல்​வர் ஸ்டா​லின் வேட்​புமனு தாக்​கல் செய்​தார். தொடர்ந்​து, மும்​மதத்​தினர் முன்​னிலை​யில் கொளத்​தூர் தொகு​தி​யில் நிறைவேற்​றப்​பட்ட திட்​டங்​கள் குறித்த கையேட்டை வெளி​யிட்டு பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.

சென்னை பெரம்​பூர் தொகு​தி​யில் தவெக தலை​வர் விஜய் வேட்​புமனு தாக்​கல் செய்தார். பனையூரில் உள்ள வீட்​டில் அவர் புறப்​பட்​டது முதல் மனுத்​தாக்​கல் செய்​யும் அலு​வல​கம் வரை வழிநெடு​கிலும் ஏராள​மான தொண்​டர்​கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்​றனர். மனுத் தாக்​கல் செய்த பிறகு, பெரம்​பூர், கொளத்​தூர் தொகு​தி​களில் விஜய் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.

நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தனது தாய் அன்​னம்​மாள், மனைவி கயல்​விழி ஆகியோ​ருடன் வந்து காரைக்​குடி தொகு​தி​யில் வேட்​புமனு தாக்​கல் செய்​தார். மனுத் தாக்​கல் மாலை 3 மணிவரை நடை​பெற்​றது. தமிழகம் முழு​வதும் பெரும்​பாலான தொகுதி​களில் நாதக வேட்​பாளர்​கள் வேட்​புமனு தாக்​கல் செய்​துள்​ளனர். சென்னை அண்ணா நகர் உள்​ளிட்ட சில தொகு​தி​களில் ஒரு​வர்​கூட மனுத்தாக்​கல் செய்​ய​வில்​லை. சென்னை வேளச்​சேரி தொகு​தி​யில் அதி​முக வேட்​பாளர் அசோக்மனுத் தாக்​கல் செய்​தார்.

560 மனுக்கள் தாக்கல்: மனுத் தாக்​கலின் போது, தேர்​தல் நடத்​தும் அலு​வலரின் அலு​வல​கத்​துக்​குள் வேட்​பாளர் உட்பட 5 பேர் மட்​டுமே அனு​ம​திக்​கப்​பட்​டனர். நேற்று ஒரே நாளில் தமிழகம் முழு​வதும் 560-க்​கும் மேற்​பட்ட வேட்​புமனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. சென்​னை​யில் மட்​டும் 47 வேட்​புமனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. மனுத் தாக்​கல் செய்து முடித்​ததும், வேட்​பாளர்​கள் தங்​கள் தொகு​தி​களில் தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டனர்.

இன்று மகாவீர் ஜெயந்​தி, நாளை (ஏப்​.1) வங்​கி​களுக்கு விடு​முறை காரண​மாக 2 நாட்​கள் மனு தாக்​கல் நடை​பெறாது. அடுத்து, ஏப்​.2-ம் தேதி மனுத் தாக்​கல் நடை​பெறும். 3-ம் தேதி புனித வெள்​ளி, 5-ம் தேதி ஞாயிற்​றுக்​கிழமை என்​ப​தால் 2 நாட்​கள் மனுத்தாக்​கல் நடை​பெறாது. 4, 6-ம் தேதி​கள் மட்​டுமே அவகாசம் இருப்​ப​தால் அந்த 2 நாட்​களும் மனுத் தாக்​கல் விறு​விறுப்​பாக நடை​பெறும். 6-ம் தேதி​யுடன் மனுத் தாக்​கல் முடிகிறது.

7-ம் தேதி மனுக்​கள் பரிசீலனை நடை​பெறும். மனுக்​களை திரும்​பப்பெற 9-ம் தேதி கடைசி நாள். அன்று இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்​படும், சுயேச்சை வேட்​பாளர்​களுக்​கான சின்​னங்​களும் அன்று மாலையே ஒதுக்​கப்​படும்.

வேட்​புமனுவை வேட்​பாளர்​கள் இணை​ய​வழி​யில் (Suvidha Portal) பூர்த்தி செய்​ய​லாம். ஆனால் பூர்த்தி செய்த விண்​ணப்​பங்​களை அச்​சிட்டு தேர்​தல் நடத்​தும் அலு​வலரிடம் நேரில் மட்​டுமே தாக்​கல் செய்ய வேண்​டும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. பிரச்​சா​ரம்,வாகன அனு​மதி உள்​ளிட்ட தேர்​தல் தொடர்​பான அனைத்து அனு​ம​தி​களை​யும் சுவிதா இணை​யதளம் அல்​லது செயலி வழி​யாகவே விண்​ணப்​பித்து பெற வேண்​டும் என்று தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

வேட்​புமனு தாக்​கல் செய்​தவர்​களின் சொத்​துகள் உள்​ளிட்ட விவரங்​களை https://affidavit.eci.gov.in/ என்ற இணை​யதளத்​தில்​ பொது​மக்​கள்​ தெரிந்​து​கொள்​ள தேர்​தல்​ ஆணை​யம்​ ஏற்​பாடு செய்​திருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

சட்டப்பேரவைத் தேர்தல் களைகட்டியது: ஸ்டாலின், விஜய், சீமான் மனுதாக்கல்
​ஸ்டாலினின் கையிருப்பு ரூ.10 ஆயிரம் மட்டுமே: விஜய்க்கு ரூ.404 கோடிக்கு அசையும் சொத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in