​ஸ்டாலினின் கையிருப்பு ரூ.10 ஆயிரம் மட்டுமே: விஜய்க்கு ரூ.404 கோடிக்கு அசையும் சொத்து

வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிர​மாண பத்​திரத்​தில் தகவல்
வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய்

வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய்

Updated on
2 min read

சென்னை: கையிருப்​பாக ரூ.10 ஆயிரம் மட்​டுமே ரொக்​கம் இருப்​ப​தாக​வும், ரூ.6.26 கோடிக்கு அசை​யும், அசையா சொத்​துகள் இருப்​ப​தாக​வும் வேட்​புமனு​வில் முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

தவெக தலை​வர் விஜய், தனக்கு ரூ.404 கோடி​யில் அசை​யும் சொத்​துகள் இருப்​ப​தாக தெரி​வித்​துள்​ளார். சென்னை கொளத்​தூரில் போட்​டி​யிடும் மு.க.ஸ்​டா​லின் நேற்று வேட்​புமனு தாக்​கல் செய்​தார். அத்​துடன் அவர் தாக்​கல் செய்​துள்ள பிர​மாணப்​பத்​திரத்​தில் குறிப்​பிட்​டுள்ள சொத்து விவரம்:

கடந்த ஆண்டு தனக்கு ரூ.30.59 லட்​ச​மும், மனைவி துர்கா​வுக்கு ரூ.5.33 லட்​ச​மும் வரு​மானம் கிடைத்​த​தாக வரு​மான வரி கணக்​கில் தெரி​வித்​துள்​ளார். தன்​னிடம் தற்​போது கையிருப்​பாக ரூ.10 ஆயிர​மும், மனைவி துர்​கா​விடம் ரூ.40 ஆயிர​மும் ரொக்​கம் உள்​ள​தாக குறிப்​பிட்​டுள்​ளார்.

தன்​னிடம் நகைகள் எது​வும் இல்​லை. மனைவி துர்​கா​விடம் 720 கிராம் நகைகள் உள்​ளன. இரு​வர் பெயரிலும் கார் உட்பட எந்த வாக​னங்​களும் இல்லை என்​றும் குறிப்​பிட்​டுள்​ளார். தனது பெயரில் ரூ.3.30 கோடி மதிப்​பிலான அசை​யும் சொத்​துகளும், மனைவி துர்கா பெயரில் ரூ.1.32 கோடி மதிப்​பிலான அசை​யும் சொத்​துகளும் என மொத்​தம் ரூ.4.62 கோடிக்கு அசை​யும் சொத்​துகள் உள்​ளன.

விவ​சாய நிலம், குடி​யிருப்பு கட்​டிடம் என முதல்​வர் ஸ்டா​லின் பெயரில், ரூ.2.96 கோடிக்​கும், மனைவி துர்கா பெயரில் ரூ.2.11 கோடிக்​கும் என ரூ.5.07 கோடி அசையா சொத்​துகள் உள்​ளன. மொத்​த​மாக, அசை​யும், அசையா சொத்​துகள் என ரூ.9.69 கோடி சொத்​துகள் உள்​ளன. தனக்​கும், தனது மனவைிக்​கும் கடன்​கள் இல்​லை. வழக்​கு​கள் ஏதும் இல்லை எனவும்​ அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

விஜய் சொத்து மதிப்பு: பெரம்​பூர் தொகு​தி​யில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் தனது வேட்​புமனுவை நேற்று தாக்​கல் செய்​தார். அனர் தனது பிர​மாண பத்​திரத்தில்,​கையில் ரூ.2 லட்​சம் ரொக்​கம் இருப்​ப​தாக​வும், மனை​வி​யிடம் ரூ.1 லட்​சம் இருப்​ப​தாக​வும் தெரி​வித்​துள்​ளார். வங்கி சேமிப்பு கணக்​கு​கள், வைப்​பீடு​கள் என மொத்​தம் ரூ.404.58 கோடிக்கு அசை​யும் சொத்​துகள் உள்​ளன. கட்​டிடங்​கள், குடி​யிருப்​பு​கள், நிலங்​கள் என அசையா சொத்​துகளின் மதிப்பு ரூ.115.13 கோடி​யாகும். குற்ற வழக்​கு​கள் ஏதும் தன் பெயரில் இல்லை என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

தனது மனைவி சங்​கீதா பெயரில் ரூ.15.51 கோடி​யில் அசை​யும் சொத்​துகள், ரூ.2.50 கோடி மதிப்பு அசையா சொத்​துகள் இருப்​ப​தாக​வும் குறிப்​பிட்​டுள்​ளார். 2 பிஎம்​டபிள்​யு, லெக்​சஸ், டோயட்டோ வெல்​பயர், மாருதி ஸ்விப்ட், டிவிஎஸ் எக்​ஸ்​எல் உள்​ளிட்ட வாக​னங்​கள் இருக்​கின்​றன.

தனது பெயரில் ரூ.1.20 கோடி மதிப்​பிலான 883 கிராம் தங்​கம் உள்​ளது. 135 காரட் வைர நகைகள் மனைவி சங்​கீதா பெயரில் இருக்​கிறது. கொடைக்​கானலில் 2 பங்​களா உள்​ளது. தனது பெயரில் கடன் எது​வும் இல்லை என்று கூறி​யுள்​ளார்.

அதே​நேரத்​தில், தந்தை சந்​திரசேகருக்கு ரூ.3.02 கோடி, மனைவி சங்​கீ​தாவுக்கு ரூ.12.60 கோடி, தாய் ஷோபாவுக்கு ரூ8.71 லட்​சம், புஸ்ஸி ஆனந்த்​துக்கு ரூ.3 கோடி கடன் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் பிர​மாண பத்​திரத்​தில் தெரி​வித்​துள்ளார்.

<div class="paragraphs"><p>வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய்</p></div>
5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் ராமதாஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in