விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: அமித் ஷாவை சந்தித்த பின் இபிஎஸ் தகவல்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்

Updated on
1 min read

“கூட்​ட​ணிக் கட்​சிகளு​டன் விரை​வில் தொகுதி பங்​கீடு பேச்​சு​வார்த்தை ஆரம்​பிக்​கப்​படும்” என அமித் ஷாவை சந்​தித்த பின் அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்​பாடி பழனி​சாமி தெரி​வித்​தார்.

தமி​ழ​கத்​தில் விரை​வில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இதை​யொட்டி திமுக, அதி​முக, தவெக உள்​ளிட்ட கட்​சிகள் தேர்​தலுக்​கான வேலை​களை தீவிர​மாக செய்து வரு​கின்​றன. இதில் திமுக தனது கூட்​டணி கட்​சிகளு​டன் தொகுதி பங்​கீடு பேச்​சு​வார்த்​தையை நடத்தி வரு​கிறது. அதி​முக எப்​போது பேச்​சு​வார்த்தை தொடங்​கும் என அதன் கூட்​டணி கட்​சிகள் எதிர்​பார்த்​துள்​ளனர்.

இந்​தச் சூழலில்​தான் டெல்​லி​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை அவரது இல்​லத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று முன்​தினம் இரவு சந்​தித்து பேசி​னார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்​திப்​பில் பல்​வேறு விஷ​யங்​கள் பேசப்​பட்​டன.

இதையடுத்​து, நேற்று காலை சென்னை புறப்​பட்ட பழனி​சாமி டெல்லி விமான​நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: “மத்​திய உள்​துறை அமைச்​சரை சந்​தித்து தமிழக தேர்​தல் நில​வரம் பற்றி கலந்து பேசினோம்.

தேர்​தலில் நாம் எவ்​வாறு இணைந்து செயல்பட வேண்​டும் என்​பது பற்றி ஆலோ​சித்​தோம். சில கட்​சிகளு​டன் கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கி​றோம். அவர்​கள் அதி​முக கூட்​ட​ணிக்கு வரு​வதற்கு வாய்ப்பு உண்​டு. சசிகலா குறித்து பேச​வில்​லை. அதை விடுங்​கள்.

எங்​கள் கூட்​ட​ணி​யில் குழப்​பம் எது​வும் கிடை​யாது. எங்​களைப் பொறுத்​தவரை சுமுக​மாக, மிகச்​சிறப்​பாக, எழுச்​சி​யாக கூட்​டணி அமைந்​திருக்​கிறது. தேர்​தல் தேதி இன்​னும் அறிவிக்​கப்​பட​வில்​லை. எனவே தொகு​திப் பங்​கீடு பேச்சு விரை​வில் ஆரம்​பிக்​கப்​படும். நாங்​கள் எதைப் பற்​றி​யும் கவலைப்​பட​வில்​லை.

திமுக கூட்​ட​ணி​யில்​தான் பிரச்னை இருக்​கிறது. அந்த கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் இருக்​குமா என்றே தெரிய​வில்​லை. தேஜ கூட்​டணி ஒன்​றாக இருந்து மிகச் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறது. வரும் தேர்​தலில் அதி​முக தலை​மையி​லான தேஜ கூட்​டணி அதிக இடங்​களில் வெற்​றி​பெற்று அதி​முக ஆட்சி அமைக்​கும்.இவ்​வாறு அவர் கூறி​னார்.

7 மற்​றும் 8-ல் ஈரோடில் பிர​சா​ரம்: இதற்​கிடையே, “மக்​களைக் காப்​போம் - தமி​ழ​கத்தை மீட்​போம்” என்ற தலைப்​பில் தமி​ழ​கம் முழு​வதும் சட்​டப்​பேரவை தொகுதி வாரி​யாக பழனி​சாமி பிர​சா​ரம் செய்து வரு​கி​றார். அதன் தொடர்ச்​சி​யாக வரும் 7, 8--ம் தேதி​களில் பிரா​சார சுற்​றுப்​பயணத்தை பழனி​சாமி மேற்​கொள்ள இருக்​கி​றார்.

7-ம் தேதி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்​டம் அந்​தி​யூரில் மாலை 4.30 மணிக்​கும், 8-ம் தேதி ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்​டம் பெருந்​துறை​யில் மாலை 4 மணிக்​கும், பவானி​யில் 5.30 மணிக்​கும் பழனி​சாமி தேர்​தல் பிரச்​சா​ரம்​ மேற்​கொள்​கி​றார்​ என அதி​முக அறி​வித்​துள்​ளது.

<div class="paragraphs"><p>எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்</p></div>
தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை ‘சீட்’ - ஸ்டாலின் - சுதீஷ் இடையே ஒப்பந்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in