விஜய் வருகையால் வாக்குச்சாவடியில் தள்ளுமுள்ளு: 45 நிமிடம் காத்திருந்த வாக்காளர்கள்

விஜய் வருகையால் வாக்குச்சாவடியில் தள்ளுமுள்ளு: 45 நிமிடம் காத்திருந்த வாக்காளர்கள்
Updated on
1 min read

சென்னை: விஜய் வரு​கை​யால் நீலாங்​கரை வாக்​குச்​சாவடி​யில் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. கூட்ட நெரிசலுக்கு இடையே பலத்த போலீஸ் பாது​காப்​புடன் அவர் தனது வாக்​கைப் பதிவு செய்​தார்.

தவெக தலை​வர் விஜய், சென்னை நீலாங்​கரை  கபாலீஸ்​வரர் நகரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி வாக்​குச்​சாவடிக்கு நேற்று காலை 8:30 மணி அளவில் வந்​தார். அப்​போது, வாக்​குச்​சாவடி​யின் நுழைவு​வாயி​லில் திரண்​டிருந்த தொண்​டர்​கள், பொது​மக்​களால் கடும் கூட்ட நெரிசல், தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. இதனால், வாக்​காளர்​களின் வசதிக்​காக அமைக்​கப்​பட்​டிருந்த நிழற்​பந்​தலின் தூண் கம்​பு​கள் சரிந்து விழுந்​தன. பந்​தலின் கீழ் நின்​றிருந்த வாக்​காளர்​கள் அச்​சமடைந்து விலகி ஓடினர். இதற்​கிடையே, விஜய்யை போலீ​ஸார் பாது​காப்​பாக வாக்​குச்​சாவடிக்​குள் அழைத்​துச் சென்​றனர்.

விஜய் வரு​கை​யால் பாது​காப்பு காரணங்​களுக்காக, அந்த வளாகத்​தில் இருந்த 2 வாக்​குச்​சாவடிகளி​லும் வாக்​காளர்​கள் சுமார் 45 நிமிடங்​கள் உள்ளே அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. இதனால், வரிசை​யில் நின்​றிருந்​தவர்​கள் நீண்ட நேரம் காத்​திருக்க வேண்​டிய சூழல் உரு​வானது. இந்நிலை​யில், வாக்கை செலுத்​திய விஜய், விரலில் இடப்​பட்ட அடை​யாள மையை காண்​பித்​த​படியே வெளியே வந்​தார்.

அப்​போதும், கடும் கூட்ட நெரிசல் இருந்​த​தால், போலீ​ஸார் அவரை பாது​காப்​பாக வெளியே அழைத்து வந்​தனர். அதில், ஒரு பெண் போலீ​ஸாரின் தொப்பி கீழே விழுந்​தது. கூட்​டத்​தி​லும் அதை கவனித்த விஜய், உடனடி​யாக தொப்​பியை எடுத்து அவரிடம் கொடுத்​து​விட்​டுச் சென்​றார். விஜய் சென்ற பிறகு, வாக்​குப்​ப​திவு மீண்​டும்​ அமை​தி​யாக நடைபெற்​றது.

விஜய் வருகையால் வாக்குச்சாவடியில் தள்ளுமுள்ளு: 45 நிமிடம் காத்திருந்த வாக்காளர்கள்
வாக்காளர்களுக்கு ​திமுகவினர் டோக்கன்: அதிமுக வேட்பாளர் வளர்மதியின் கணவர் சாலையில் படுத்து தர்ணா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in