தூய்மை பணியாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியம்: தூய்மை தொழிலாளர் சங்கம் கோரிக்கை

தூய்மை பணியாளர்களுக்கு  ரூ.20 ஆயிரம் ஊதியம்: தூய்மை தொழிலாளர் சங்கம் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: தமிழ்​நாடு தூய்மை தொழிலா​ளர் சங்​கத் தலை​வர் மு.சக்​திவேல் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சுமார் 12,525 ஊராட்​சிகள் உள்ளன.

இவற்​றில் 25 ஆண்டு​களுக்​கும் மேலாக தொகுப்​பூ​தி​யத்​தில் பணி​யாற்​றிய தூய்மைப் பணி​யாளர்​கள் 9,896 பேர், கடந்த 2013-ம் ஆண்டு முதல் சிறப்பு கால​முறை ஊதி​யம் ரூ.10 ஆயிரம் பெற்று வரு​கின்​றனர்.

கடந்த 2013-ல் ரூ.2 ஆயிரம் தொகுப்​பூ​தி​யத்​தில் நியமிக்​கப்​பட்ட 16,508 தூய்​மைப் பணி​யாளர்​கள், 2020-ம் ஆண்டு முதல் ரூ.8,500 சிறப்பு கால​முறை ஊதியம் பெற்று வரு​கின்​றனர்.

தற்​போது 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தூய்​மைப் பணி​யாளர்​கள் ரூ.4 ஆயிரம் தொகுப்​பூ​தி​யத்​தில் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

மேலும் ஊராட்​சிகளில் 66 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தூய்மை காவலர்​கள் மாதம் ரூ.6 ஆயிரம் தொகுப்​பூ​தி​யத்​தில் பணி​யாற்​றுகின்​றனர்.

இவர்​களுக்​கு, அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யர்​கள், குறைந்​த​பட்ச ஊதிய சட்​டத்​தின் கீழ் நிர்​ண​யிக்​கப்​பட்ட ஊதி​யம் ரூ.20 ஆயிரம் அல்​லது கால முறை ஊதி​யம் வழங்கவேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தூய்மை பணியாளர்களுக்கு  ரூ.20 ஆயிரம் ஊதியம்: தூய்மை தொழிலாளர் சங்கம் கோரிக்கை
சென்னையில் ரூ.530 கோடி செலவில் மாநகர போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம்: ஆகஸ்ட் மாதத்துக்குள் செயல்படுத்த நகராட்சி நிர்வாக செயலர் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in