சென்னையில் ரூ.530 கோடி செலவில் மாநகர போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம்: ஆகஸ்ட் மாதத்துக்குள் செயல்படுத்த நகராட்சி நிர்வாக செயலர் அறிவுறுத்தல்

சென்னையில் ரூ.530 கோடி செலவில் மாநகர போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம்: ஆகஸ்ட் மாதத்துக்குள் செயல்படுத்த நகராட்சி நிர்வாக செயலர் அறிவுறுத்தல்
Updated on
2 min read

சென்னை: ​மாநகர போக்​கு​வரத்தை மேம்​படுத்த ரூ.530 கோடி​யில் செயல்​படுத்​தப்​படும் சென்னை நுண்​ணறிவு போக்​கு​வரத்து அமைப்பு திட்​டத்தை ஆகஸ்ட் மாதத்​துக்​குள் செயல்​பாட்​டுக்கு கொண்​டு வர வேண்​டும் என்று அதி​காரி​களுக்கு நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநகர போக்​கு​வரத்தை மேம்​படுத்த மாநக​ராட்சி சார்​பில், ஜப்​பான் சர்​வ​தேச ஒத்​துழைப்பு முகமை (ஜைக்​கா) நிதி​யுத​வி​யுடன் சென்னை நுண்​ணறிவு போக்​கு​வரத்து அமைப்பு (Intelligent Transport System - ITS) திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

ரூ.530 கோடி மதிப்​பீட்​டில் செயல்​படுத்​தப்​படும் இத்​திட்​டம், மேம்​பட்ட நுண்​ணறிவு போக்​கு​வரத்து தொழில்​நுட்​பங்​களைப் பயன்​படுத்தி போக்​கு​வ ரத்து மேலாண்​மையை வலுப்​படுத்​துதல், சாலைப் பாது​காப்பை மேம்​படுத்​துதல் மற்​றும் பொதுப்போக்​கு​வரத்து சேவை​களை நவீனமய​மாக்​குதல் ஆகிய​வற்றை நோக்​க​மாகக் கொண்​டுள்​ளது.

இத்​திட்​டம், மாநகர போக்​கு​வரத்து காவல் துறைக்​கான, போக்​கு​வரத்து தகவல் மற்​றும் மேலாண்மை அமைப்​பு, மாநகர் போக்​கு​வரத்​துக் கழகத்​துக்​கான நகரப் பேருந்து அமைப்பு ஆகிய 2 முக்​கிய கூறுகளை கொண்​டுள்​ளது.

இதன்​கீழ், 165 இடங்​களில் போக்​கு​வரத்து நிலை​மைக்கு ஏற்ப செயல்​படும் சிக்​னல்​கள், 50 இடங்​களில் சிவப்பு விளக்கு மீறல் கண்​டறிதல் அமைப்​பு, 10 இடங்​களில் வேக வரம்பு மீறல் கண்​டறிதல் அமைப்​பு, 58 இடங்​களில் போக்​கு​வரத்து விபத்து சம்​பவம் கண்​டறிதல் அமைப்​பு, 115 இடங்​களில் போக்​கு​வரத்து நெரிசலை அறிய உதவும் தானி​யங்கி வாகன எண்​ணிக்கை மற்​றும் வகைப்​பாடு கருவி நிறு​வும்பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இவை அனைத்​தும் சென்னை போக்​கு​வரத்து காவல் துறை​யின் ஒருங்​கிணைந்த கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு மையம் மூலம் இயக்​கப்​படும். மேலும் போக்​கு​வரத்து நில​வரம் குறித்த தகவல்​களை வழங்​கும் தகவல் பலகைகள் 13 இடங்​களில் அமைக்​கப்​படும். இவை சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழக கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு மையத்​திலிருந்து இயக்​கப்​படும்.

பேருந்​துகளின் இருப்​பிடத்​தைக் கண்​டறிய 3,500 பேருந்​துகளில் உபகரணங்​கள் பொருத்​தப்பட உள்​ளன. பேருந்​துகளின் வருகை நேரத்​தைக் காட்​டும் பயணி​கள் தகவல் பலகைகள் 616 பேருந்து நிறுத்​தங்​களில் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. 32 இடங்​களில் பேருந்து பணிமனை செயல்​பாடு​களை மேம்​படுத்​தும் பணிமனை மேலாண்மை அமைப்​பு​களும் நிறு​வப்​பட்டு வரு​கின்​றன.

இப்​பணி​களை நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி நேற்று நேரில் பார்​வை​யிட்​டார். அப்​போது இத்​திட்​டத்​தின் அனைத்து கூறுகளும் ஆகஸ்ட் மாதத்​துக்​குள் செயல்​பாட்​டுக்கு கொண்​டுவர வேண்​டும் என்று அறி​வுறுத்​தி​னார்.

திட்​டம் முழு​மை​யாக செயல்​பாட்​டுக்கு வந்த பின், பயண நேரம் மற்​றும் காத்​திருப்பு நேரம் குறை​யும், போக்​கு​வரத்து சீரடை​யும். தானி​யங்கி விதி​முறை அமலாக்​கம் மூலம் சாலைப் பாது​காப்பு மேம்​படும், பொதுப் போக்​கு​வரத்து சேவை​களின் நம்​பகத்​தன்மை அதி​கரிக்​கும்.

இந்த ஆய்​வின் போது, மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​. சமீரன், இணை ஆணை​யர்​கள் வீ.ப.ஜெயசீலன் (சு​கா​தா​ரம்), செ.சர​வணன் (பணி​கள்), மத்​திய வட்​டார துணை ஆணை​யர் எச்​.ஆர்​.க​வுஷிக் ஆகியோர் உடனிருந்​தனர்.

சென்னையில் ரூ.530 கோடி செலவில் மாநகர போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம்: ஆகஸ்ட் மாதத்துக்குள் செயல்படுத்த நகராட்சி நிர்வாக செயலர் அறிவுறுத்தல்
அமோனியா வாயுக் கசிவு விபத்தில் மேலும் 3 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in