

செங்கல்பட்டு: முதல்வர் விஜய்யிடமிருந்து விவா கரத்து கோரி தொடர்ந்த வழக்கை அவரது மனைவி சங்கீதா வாபஸ் பெற்றார். அதையடுத்து இந்த வழக்கை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
முதல்வர் விஜய் கடந்த 1999-ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த தனது ரசிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் (25) என்ற மகனும் மற்றும் திவ்யா சாஷா (20) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் தனக்கு விவாகரத்து கோரி, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங் கீதா வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “கடந்த 2021-ம் ஆண்டு எனது கணவருக்கும், எனக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக எங்களுக்குள் விரிசல் ஏற்பட்டது. எனவே விவாகரத்து வழங்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நேற்று மீண்டும் விசா ரணைக்கு வந்தது. நீதிமன்ற அறை மூடப்பட்டு இரு தரப்பு வழக்கறிஞர் கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு விசாரணை ரகசியமாக நடந்தது. அப்போது சங்கீதா சுமார் 20 நிமிடங்கள் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி, கணவர் விஜய்க்கு எதிராக, தான் தொடர்ந்துள்ள விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரும் வழக்கை தனது பரிபூரண சுயநினைவுடன் தாமாக முன் வந்து வாபஸ் பெறுவதாக தெரிவி்த்தார். அதையடுத்து சங்கீதாதரப்பில் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாகக்கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை ஏற்ற நீதிபதி டி.சுஜாதா, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் வழக்கு தொடரலாம் என சங்கீதாவுக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டுள்ளார்.