திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக் கோரி பிப். 23-ல் இந்துக்கள் கந்தசஷ்டி பாராயணம் செய்ய வேண்டும்: சடகோப ராமானுஜ ஜீயர் வேண்டுகோள்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக் கோரி பிப். 23-ல் இந்துக்கள் கந்தசஷ்டி பாராயணம் செய்ய வேண்டும்: சடகோப ராமானுஜ ஜீயர் வேண்டுகோள்
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ​திருப்​பரங்​குன்​றம் மலையில் தீபம் ஏற்​ற​க் கோரி வரும் 23-ம் தேதி மாலை இந்துக்கள் வீட்​டில் கந்த சஷ்டி பாராயணம் செய்ய வேண்​டும் என்று ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

திருப்​பரங்​குன்​றம் மலை​யில் மகாதீபம் ஏற்ற வேண்​டும் என்ற நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்ற வலி​யுறுத்தி முருக பக்​தர்​கள் பேரவை சார்​பில் வரும் 23-ம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகம் முழு​வதும் கந்த சஷ்டி பாராயணம் செய்ய உள்​ளனர்.

இதற்கு ஆதரவு தெரி​வித்து வில்​லிபுத்​தூர் மணவாள மாமுனிகள் மடத்​தின் 24-வது பீடம் சடகோப ராமானுஜ ஜீயர் வெளி​யிட்​டுள்ள வீடியோ​வில் கூறி​யிருப்​ப​தாவது: பிப்​ர​வரி 23-ம் தேதி கார்த்​திகை நட்​சத்​திர​மும், சஷ்டி திதி​யும் ஒரே நாளில் வரு​கிறது.

திருப்​பரங்​குன்​றம் மலை​யில் மகா தீபம் ஏற்​ற​வும், இந்து மக்​களின் ஒற்​றுமைக்​காக​வும் அன்​றைய தினம் மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடு​கள் மற்​றும் கோயில்​களில் அனைத்து இந்து மக்​களும் தீபம் ஏற்​றி, கந்த சஷ்டி பாராயணம் செய்து வழிபட வேண்​டும்.

“கூடி​யிருந்து குளிர்ந்​தேலோ ரெம்​பா​வாய்” என ஆண்​டாள் (திருப்​பாவை) பாடியது​போல நாம் அனை​வரும் சேர்ந்து கந்த சஷ்டி பாராயணம் செய்​தால், இந்து மக்​களிடையே ஒற்​றுமை மேலோங்​கும், அனை​வரும் கந்த சஷ்டி பாராயணம் செய்து அருள்​பெற கேட்​டுக் கொள்​கிறோம். இவ்​வாறு வீடியோ​வில் தெரி​வித்​துள்​ளார்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக் கோரி பிப். 23-ல் இந்துக்கள் கந்தசஷ்டி பாராயணம் செய்ய வேண்டும்: சடகோப ராமானுஜ ஜீயர் வேண்டுகோள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 89.25 அடியாக சரிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in