

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக மாற்றமின்றி விநாடிக்கு 61 கன அடியாக நீடிக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் திறப்பைவிட நீர்வரத்து குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 89.46 அடியிலிருந்து 89.25 அடியாகவும், நீர் இருப்பு 52.03 டிஎம்சியிலிருந்து 51.80 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது.