நாகர்கோவில் சிறையில் நடந்த சபரிவர்மன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நாகர்கோவில் சிறையில் நடந்த சபரிவர்மன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
Updated on
1 min read

நாகர்கோவில்: நாகர்​கோ​வில் மாவட்ட சிறை​யில் அடித்​துக் கொல்​லப்​பட்ட சபரிவர்​மன் வழக்கு விசா​ரணை சிபிசிஐடிக்கு மாற்​றப்​பட்​டது.

கன்​னி​யாகுமரி மாவட்​டம் ஈத்​தங்​காட்​டைச் சேர்ந்​தவர் சபரிவர்​மன். மாற்​றுத் திற​னாளி​யான இவர், தனது பெட்​டிக்​கடை​யில் தடை செய்​யப்​பட்ட புகை​யிலை பொருட்​கள் விற்​பனை செய்​த​தாக, கடந்த 9-ம் தேதி தென் தாமரைகுளம் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டார். விசா​ரணை கைதி​யாக நாகர்​கோ​வில் மாவட்ட சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த அவர் 13-ம் தேதி அடித்​துக் கொலை செய்​யப்​பட்​டார்.

இதைத்​தொடர்ந்​து, சிறை வார்​டன்​கள் 3 பேர், 8 கைதி​கள் என 11 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இக் கொலை வழக்கை நேசமணி நகர் போலீ​ஸார் விசா​ரித்து வந்​தனர். அத்​துடன் நாகர்​கோ​வில் சிறை​யில் தடவியல் நிபுணர்​கள் சோதனை மேற்​கொண்டு முக்​கிய தடயங்​களை கைப்​பற்​றி​யுள்​ளனர்.

இந்​நிலை​யில், சபரிவர்​மனின் செல்​போன் சிறை​யிலேயே காணாமல் போயுள்​ளது. அந்த செல்​போனில் அவர் கொலை செய்யப்​பட்​டது தொடர்​பான முக்​கிய வீடியோ ஆதா​ரங்​கள் இருப்ப​தாகக் கூறப்​படு​கிறது. இதனால், அந்த செல்​போனை கண்டு​பிடிக்​கும் பணி​யில் போலீ​ஸார் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்.

சபரிவர்​மனின் குடும்​பத்​துக்கு ரூ.10 லட்​சம் நிவாரணம், அவரது மனைவிக்கு தற்​காலிக அரசு பணி, வீட்​டுமனை பட்​டா, வீடு கட்​டு​வதற்​கும், மகனின் மேல்​படிப்​புக்​கும் நிவாரணத் தொகை ஆகிய​வை அரசின் சார்​பில் வழங்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், இக்கொலை வழக்கு விசா​ரணையை சிபிசிஐடிக்கு மாற்​றி, டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் உத்​தர​விட்​டார். சிபிசிஐடி போலீ​ஸார் முதற்​கட்​ட​மாக சபரிவர்​மனின் குடும்பத்​தினரிட​மும், தென் தாமரைகுளம் காவல்​நிலை​யத்​திலும் விசா​ரிக்க முடிவு செய்​துள்​ளனர்.

நாகர்கோவில் சிறையில் நடந்த சபரிவர்மன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
நீலகிரியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in