மக்கள் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு 10 நாட்களில் பதில் அளிக்க வேண்டும்: பல்துறை அதிகாரிகளுக்கு தயாநிதி மாறன் எம்.பி. உத்தரவு

மக்கள் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு 10 நாட்களில் பதில் அளிக்க வேண்டும்: பல்துறை அதிகாரிகளுக்கு தயாநிதி மாறன் எம்.பி. உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: மக்​கள் பிரதிநிதிகள் எழுப்​பிய கேள்​வி​களுக்கு 10 நாட்​களுக்​குள் எழுத்​துப்​பூர்​வ​மாக பதில் அளிக்க வேண்​டும் என்று பல்​துறை அதி​காரி​களுக்கு தயாநிதி மாறன் எம்.பி. உத்​தர​விட்​டார்.

சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்​கிணைப்பு மற்​றும் கண்​காணிப்​புக் குழுக் கூட்​டம், குழு​வின் தலை​வர் மத்​திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தலை​மையில் ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில், சென்னை மாவட்​டத்​தில் செயல்​படுத்​தப்​படும் அம்​ருத் 2.0, ஸ்​மார்ட் சிட்டி மிஷன், நிர்​பயா நிதி திட்​டம், தூய்மை இந்​தியா இயக்​கம், தேசிய நகர்ப்​புற சுகாதார இயக்​கம், தேசிய காசநோய் ஒழிப்​புத் திட்​டம், மெட்ரோ ரயில் உள்​ளிட்ட பல்​வேறு திட்​டங்​களின் முன்​னேற்​றம் குறித்து அதி​காரி​களு​டன் ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது.

அப்​போது, சென்​னை​யில் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்​பட்​டுள்ள போக்​கு​வரத்து நெரிசலை கட்​டுப்​படுத்த என்ன நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டது என தயாநிதி மாறன் கேள்வி எழுப்​பினார். இதற்கு மெட்ரோ ரயில் நிறு​வன பொது​மேலா​ளர் பதில் அளித்​தார்.

இதற்கு கோபமடைந்த தயாநிதி மாறன், மத்​திய அரசு சார்​பில் நடை​பெறும் கூட்​டத்​தில், மெட்ரோ ரயில் நிர்​வாக இயக்​குநர் எங்கே என கேள்வி எழுப்​பினார். பின்​னர் மாவட்ட ஆட்​சி​யரை அழைத்து, அடுத்த கூட்​டத்​தில் மெட்ரோ ரயில் நிர்​வாக இயக்​குநர் கட்​டாயம் பங்​கேற்க வேண்​டும்.

போக்​கு​வரத்து நெரிசல் தொடர்​பாக மாநக​ராட்சி மீது பழிபோடக்​கூடாது. இது தொடர்​பாக விரிவான அறிக்​கையை தாக்​கல் செய்ய வேண்​டும் என அறி​வுறுத்​தினார்.

இதையடுத்து காங்​கிரஸ் எம்.பி. பிரவீன் சக்​ரவர்த்தி, சென்​னை​யில் ஸ்​மார்ட் வகுப்​பறை திட்​டத்​தில் ரூ.63 கோடி ஒதுக்​கப்​பட்டு, ரூ.1.5 கோடி மட்​டுமே செல​விடப்​பட்​டுள்​ள​தாக கூறினார். எஞ்​சிய தொகை ஏன் செல​விடப்​பட​வில்லை என்​பது உட்​பட பல்​வேறு கேள்​வி​களை எழுப்​பினர்.

இறுதி​யாக, இக்​கூட்​டத்​தில் மக்​கள் பிரதி​நி​தி​கள் எழுப்​பிய அனைத்து கேள்​வி​களுக்​கும் 10 நாட்​களுக்​குள் எழுத்​துப்​பூர்​வ​மாக பதில் அளிக்க வேண்​டும் என அதி​காரி​களுக்கு தயாநிதி மாறன் உத்​தர​விட்​டார்.

இக்​கூட்​டத்​தில் மேயர் பிரியா, எம்.பி.க்​கள், கலாநிதி வீராசாமி, பி.வில்​சன், கிரிராஜன், பிரவீன் சக்​ரவர்த்தி, எம்​எல்​ஏக்​கள் சேகர்​பாபு, பல்​லவி, துணை மேயர் மகேஷ்குமார், மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்.சமீரன், சென்னை மாவட்ட ஆட்சி​யர் மாலதி ஹெலன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

மக்கள் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு 10 நாட்களில் பதில் அளிக்க வேண்டும்: பல்துறை அதிகாரிகளுக்கு தயாநிதி மாறன் எம்.பி. உத்தரவு
புதிய கட்டணத்துக்கேற்ப ஆட்டோ மீட்டர்களை மாற்ற 6 மாதம் அவகாசம்: போக்குவரத்து துறை உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in