ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களை நியமிக்க கட்டுப்பாடுகள்

மாவட்ட ஆட்சியரின் அனுமதி அவசியம் என உத்தரவு
ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களை நியமிக்க கட்டுப்பாடுகள்
Updated on: 
1 min read

சென்னை: கி​ராம ஊராட்​சிகளில் பகு​திநேர மேல்​நிலை நீர்த்​தேக்​கத்தொட்டி ஆபரேட்​டர்​களை ஊராட்சி மன்​றத் தலை​வர்​கள் தன்​னிச்​சை​யாக நியமிக்​கக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என்றும் ஊரக வளர்ச்​சித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்​சித் துறை ஆணை​யர் வி.அ​முதவல்​லி, அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​கள் (சென்னை நீங்​கலாக) மற்​றும் உதவி இயக்​குநர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் முழு​வதும் உள்ள கிராம ஊராட்​சிகளில் மேல்​நிலை நீர்த்​தேக்​கத் தொட்டி இயக்​குபவர்​களின் எண்​ணிக்கை 40,419-க்கு மிகாமல் இருக்க வேண்​டுமென ஏற்​கெனவே அரசால் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இவர்​களுக்​கான தொகுப்​பூ​தி​யத்தை கடந்த ஜன.30-ம் தேதி ரூ.5 ஆயிர​மாக உயர்த்தி வழங்க அரசாணை வெளி​யிடப்​பட்​டது. ஆனால், ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் வெவ்​வேறு வகை​யான ஊதி​யம் வழங்​கப்​படு​வ​தாகப் புகார்​கள் வரு​கின்​றன.

இதனைத் தவிர்க்​கும் பொருட்டு, இவர்​களுக்கு தொகுப்​பூ​தி​யம் ரூ.5000, தற்​காலிக உயர்வு மற்​றும் சிறப்​புப் படி என மொத்​தம் ரூ.6,700 ஊதி​ய​மாக நிர்​ண​யம் செய்​யப்​பட்​டது. மேலும், தற்​போது ஊதி​யம் வழங்​கு​வதற்​கான ஊராட்சி கணக்கு மாற்​றப்​பட்டு பல்​வேறு கட்​டுப்​பாடு​களும் விதிக்​கப்​பட்​டுள்​ளன.

அதன்​படி உயர்த்​தப்​பட்ட ஊதி​யத்​துக்​கான நிலு​வைத் தொகையை கடந்த ஜன.30-ம் தேதி முதல் கணக்​கிட்​டு, ஊராட்​சி​யின் நிதி​நிலைக்கு ஏற்ப தவணை முறை​யிலோ அல்​லது ஒரே தவணை​யிலோ வழங்க வேண்​டும்.

ஆபரேட்​டர்​களுக்​குக் குழு காப்​பீட்​டுச் சந்​தாவை மாதந்​தோறும் கட்​டா​யம் பிடித்​தம் செய்​து, அதற்​கான ரசீதை வழங்க வேண்​டும். அதே​போல், நீர்த்​தேக்​கத் தொட்டி இயக்​குபவர்​களின் ஓய்​வு​பெறும் வயது 60 ஆகும். அந்த வயதைக் கடக்​கும்​போது அவர்​களுக்​குப் பணி ஓய்வு அளிக்​கப்பட வேண்​டும்.

இவர்​கள் அனை​வருக்​கும் பணிப்​ப​திவேடு தொடங்​கப்​பட்டு உரிய பதிவு​கள் மேற்​கொள்​ளப்பட வேண்​டும். ஊராட்​சி​யின் வரு​கைப் பதிவேட்​டில் தினசரி வரு​கை​யைக் கட்​டா​யம் பதிவு செய்ய வேண்​டும்.

ஊராட்​சிகளில் தேவைக்கு அதி​க​மாக தன்​னிச்​சை​யாக ஊராட்சி மன்​றத் தலை​வர்​களால் ஆபரேட்​டர்​கள் நியமனம் செய்​யப்​படு​வதைத் தவிர்க்க வேண்​டும்.

இனிவரும் காலங்​களில், புதிய பணி​யாளர்​களை நியமிக்​க தேவை இருப்பின் கிராம ஊராட்​சி​யில் தீர்​மானம் இயற்​றப்​படு​வதுடன், சம்​மந்​தப்​பட்ட மாவட்ட ஆட்​சி​யரின் ஒப்​புதல் பெற்ற பின்​னரே பணி​யமர்த்​தப்பட வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களை நியமிக்க கட்டுப்பாடுகள்
மதுரை, கோவையில் ‘மெட்ரோ’ - பிரதமர் அனுமதி தர வேண்டும்: வீரபாண்டியன் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in