மதுரை, கோவையில் ‘மெட்ரோ’ - பிரதமர் அனுமதி தர வேண்டும்: வீரபாண்டியன் வலியுறுத்தல்

மதுரை, கோவையில் ‘மெட்ரோ’ - பிரதமர் அனுமதி தர வேண்டும்: வீரபாண்டியன் வலியுறுத்தல்
Updated on: 
1 min read

சென்னை: மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்​டங்​களுக்கு உடனடி​யாக அனு​மதி வழங்க வேண்​டும் என பிரதமர் மோடிக்​கு, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: சென்​னை​யில் பூந்​தமல்லி முதல் வடபழனி வரையி​லான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்​துள்​ளார்.

இத்​திட்​டத்தை கொண்​டுவர முந்​தைய தமிழக அரசும், புதிய அரசும், தமிழக மக்​களும் தொடர்ந்து வலி​யுறுத்தி வந்​தனர். இந்த புதிய திட்​டம் மக்​களின் போக்​கு​வரத்​துக்கு பேருத​வி​யாக அமை​யும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதே​போல் மதுரை, கோவை மாநகரங்​களி​லும் மெட்ரோ ரயில் திட்​டத்தை செயல்​படுத்த வேண்​டியது அவசி​ய​மாகும். மெட்ரோ ரயில் கொள்கையின் குறைந்​த​பட்​சம் 20 லட்​சம் மக்​கள் தொகை இருக்க வேண்​டும் என்​பதை சுட்​டிக்​காட்​டி, 15.8 லட்​சம் மக்​கள் தொகை கொண்ட கோவை, 15 லட்​சம் மக்​கள் தொகை கொண்ட மதுரையில் மெட்ரோ திட்​டங்​களை மத்​திய அரசு நிராகரித்​துள்​ளது.

அதே​நேரம் பாஜக ஆளும் மாநிலங்​களில் 2011 மக்​கள் தொகை அடிப்​படை​யில் ஆக்​ரா, போபால், பாட்னாவுக்கு அனு​மதி தரப்​பட்​டுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு அனு​மதி மறுத்​திருப்​பது, மத்​திய அரசின் பாரபட்ச போக்கையே காட்​டு​கிறது.

தமிழகத்​துக்கு எதி​ரான இத்​தகைய எதிர்​மறை போக்கை மத்​திய அரசு கைவிட வேண்​டும். கோவை, மதுரை மாநகரங்​களில் மெட்ரோ ரயில் திட்​டங்​களுக்கு பிரதமர் அனு​மதி வழங்க வேண்​டும்.

மதுரை, கோவையில் ‘மெட்ரோ’ - பிரதமர் அனுமதி தர வேண்டும்: வீரபாண்டியன் வலியுறுத்தல்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 62 லட்சம் ‘ஸ்பாஞ்ச் கேக்’ கொள்முதல்: தமிழக அரசு டெண்டர் வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in