ராகுல் நிகழ்வில் பங்கேற்க இணையதளம் மூலம் பதிவு: மாணவர்கள், இளைஞர்களுக்கு அழைப்பு

ராகுல்காந்தி சென்னையில் பங்கேற்கும் மாணவர்களின் குரல் நிகழ்வு தொடர்பான அறிவிக்கையை செய்தியாளர்களிடம் காண்பித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான நிவேதித் ஆல்வா  உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்

ராகுல்காந்தி சென்னையில் பங்கேற்கும் மாணவர்களின் குரல் நிகழ்வு தொடர்பான அறிவிக்கையை செய்தியாளர்களிடம் காண்பித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான நிவேதித் ஆல்வா உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்

Updated on: 
1 min read

கோவை: சென்னையில் வரும் 10-ம் தேதி ராகுல்காந்தியுடன் மாணவர்கள் குரல் நிகழ்வில் பங்கேற்க மாணவர்கள், இளைஞர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா தெரிவித்தார்.

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வரும் 10-ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெறும் மாணவர்கள் குரல் நிகழ்வில் கலந்து கொண்டு, மாணவர்கள், இளைஞர்களுடன் கலந்துரையாட உள்ளார். மாணவர்களை சந்தித்து அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதாவது நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, படிப்புக்கான கட்டணம், குழந்தைகளின் மீதான சுமைகளுக்கு தீர்வு போன்றவை குறித்து கலந்துரையாடுகிறார். இந்நிகழ்வில் பங்கேற்க மாணவர்கள், இளைஞர்கள் இதற்கென உள்ள ‘க்யூ ஆர் கோட்’ வாயிலாகவும், rahulgandhi.in/chhatron-ki-goonj என்ற இணையதளம் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>ராகுல்காந்தி சென்னையில் பங்கேற்கும் மாணவர்களின் குரல் நிகழ்வு தொடர்பான அறிவிக்கையை செய்தியாளர்களிடம் காண்பித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான நிவேதித் ஆல்வா  உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன் </p></div>
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு: வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in