இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்

2500 பேர் கடலுக்கு செல்லவில்லை
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்
Updated on: 
1 min read

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 3-ம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற எபிஸ்டன், மத்தியா, ஜான்ஜெய்சன், ஸ்டீவன்சன், சுபார்டன், அபிஸ்டன், மோபிஸ், அந்தோணி பிரதீப், அந்தோணி புரூடஸ் ஆகிய 9 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 9 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் அருகே மீனவர்களின் ஆலோசனை கூட்டம் மீனவப் பிரதிநிதி சேசுராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து, ராமேசுவரம் கடற்கரையில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்
ஒரு தாயின் 3 ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த நீதி: துணை நடிகர் மரணத்தில் திருப்பம்.. மகன் கொலையை அம்பலப்படுத்தினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in