“தேர்தல் முடிவுக்கு பிறகு தேவைப்பட்டால் விஜய்யின் ஆதரவை நாங்கள் கோருவோம்” - ராம்தாஸ் அத்வாலே கருத்து

கோவையில்  நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.

கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.

Updated on
1 min read

கோவை: தமிழகம், புதுச்​சேரி​யில் தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு தேவைப்​பட்​டால் தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு அமைக்க விஜய்​யின் ஆதரவை கோரு​வோம் என, மத்​திய சமூக நீதி மற்​றும் அதி​கார மளித்​தல் துறை இணை அமைச்​சரும், இந்​தி​யக் குடியரசுக் கட்​சி​யின் தலை​வரு​மான ராம்​தாஸ் அத்​வாலே தெரி​வித்​தார்.

கோவை​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பிரதமர் மோடி தமிழகத்தை சேர்ந்த சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு குடியரசு துணைத்​தலை​வர் பொறுப்பை வழங்​கி​யுள்​ளார்.

தமிழகத்​தில் தலித்​துகள் மற்​றும் பெண்​களுக்கு எதி​ராக அதி​கரித்​து​வரும் அநீ​தி​களைத்தடுக்க, தமிழ்​நாட்​டில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைய வேண்​டும். விவ​சா​யிகள், பெண்​கள் மற்​றும் ஏழ்மை நிலை​யில் வாழ்​பவர்​கள் நலனுக்​காக பழனி​சாமி ஆட்சி நடத்​து​வார்.

திமுகவை போல் குடும்​பத்​துக்​காக ஆட்சி நடத்​த​மாட்​டார். வரும் தேர்​தலில் திமுக வீழ்த்​தப்​படும். தமிழக மக்​கள் மாற்​றத்தை எதிர்​பார்க்​கின்​றனர். எம்​ஜிஆர், என்​டிஆர் மற்​றும் ஜெயலலிதா போன்ற ஜாம்​ப​வான்​களின் வரிசை​யில் விஜய் மிக​வும் பிரபல​மான நடிக​ராகத் திகழ்​கிறார்.

தமிழக அரசி​யலில், தமிழக வெற்​றிக் கழகத்​துடன் தற்​போது வரை பேச்​சு​வார்த்​தைகள் எது​வும் நடை​பெற​வில்​லை. தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு ஒரு​வேளை விஜய் தொகு​தி​களைக் கைப்​பற்​றி​னால், ஆட்சி அமைக்க அவரது ஆதரவை கோரு​வோம்.

தமிழகத்​தில் விஜய் அதிக வாக்​கு​களைப் பெறு​வார். திமுக​வுக்கு பெரும் சவாலாக இருப்​பார். தங்​களது இலக்கு தனிப்​பெரும்​பான்மை என்​றாலும், கூட்​ட​ணியை வலுப்​படுத்த விஜய்யை வரவேற்​போம்.

முத்ரா யோஜனா மற்​றும் பிரதமரின் வீடு வழங்​கும் திட்​டம் போன்ற திட்​டங்​கள் மூலம் கோடிக்​கணக்​கான மக்​கள் வறுமையி​லிருந்து மீட்​கப்​பட்​டுள்​ளனர். அனை​வருட​னும் இணைந்​து, அனை​வரின் வளர்ச்​சி’ என்ற முழக்​கம் தமிழக மக்​களிடம் பலமான தாக்​கத்தை ஏற்​படுத்​தும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>கோவையில்  நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.  </p></div>
‘நியோ மேக்ஸ்’ வீட்டு மனைகளை ஏலத்தில் வாங்கும் முதலீட்டாளர்களுக்கு சலுகை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in