‘நியோ மேக்ஸ்’ வீட்டு மனைகளை ஏலத்தில் வாங்கும் முதலீட்டாளர்களுக்கு சலுகை

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அறிவிப்பு
‘நியோ மேக்ஸ்’ வீட்டு மனைகளை ஏலத்தில் வாங்கும் முதலீட்டாளர்களுக்கு சலுகை
Updated on
1 min read

மதுரை: ‘நியோ மேக்ஸ்’ நிறுவன வீட்டு மனை​களை ஏலத்​தில் வாங்​கும் முதலீட்​டாளர்​களுக்கு சலுகை வழங்​கப்​படும் என மதுரை பொருளா​தா​ரக் குற்​றப்​பிரிவு போலீ​ஸார் அறி​வித்​துள்​ளனர்.

இது தொடர்​பாக வெளி​யிடப்​பட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: நியோ மேக்ஸ் மற்​றும் அதன் துணை நிறு​வனங்​களுக்​குச் சொந்​த​மான அசையா சொத்​துகளில் டிடிசிபி அங்​கீ​காரம் பெற்ற மனை​யிடங்​கள் எம்​எஸ்​டிசி வலை​தளம் (www.mstcecommerce.com) மூலம் மின்​னணு ஏலம் மார்ச் 17-ம் தேதி தொடங்கி நடந்​தது.

சட்​டப்​பேர​வைத் தேர்​தல் காரண​மாக, ஏப்​ரல் 23-ம் தேதி நடக்​க​விருந்த சொத்​துகள் (திரு​வாரூர் மாவட்​டம் ஆழியூர்) ஏலம் மே 15-ம் தேதிக்கு தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது. முதலீட்​டாளர்​கள் தங்​களது முதலீடு தொகைக்கு மேல் அதி​க​மான தொகைக்கு ஏலம் எடுத்து இருந்​தால், அந்த அதிக தொகையை மட்​டுமே செலுத்த வேண்​டும்.

இவ்​வழக்​கின் இறு​தி​யில், பாதிக்​கப்​பட்ட மொத்த முதலீட்​டாளர்​களுக்கு திரும்ப கொடுக்​கும் தொகை​யானது, வழக்​கின் மொத்த இழப்​பீட்​டுத் தொகைக்கு நிக​ராக (100 சதவீதத்​துக்கு மேல்) இருக்​கும்​பட்​சத்​தில், ஏலம் எடுத்த முதலீட்​டாளர்​கள் வேறெந்த தொகை​யும் செலுத்​தத் தேவை​யில்​லை.

பிரித்​துக் கொடுக்​கப்​படும் தொகை​யானது, மொத்த இழப்​பீட்​டுத் தொகைக்கு (100 சதவீதத்​துக்​கும் குறை​வாக இருந்​தால்) குறை​வாக இருக்​கும்​பட்​சத்​தில், முதலீட்​டாளர்​களுக்கு பிரித்​துக் கொடுக்​கப்​படும் விகி​தாச்​சார தொகை போக, மீத​முள்ள தொகையை ஏலம் எடுத்த முதலீட்​டாளர்​கள் செலுத்த வேண்​டும்.

இதில் விருப்​பம் இல்​லாத ஏலம் எடுத்த முதலீட்​டாளர்​கள் எந்த நிலை​யிலும் ஏலத்​தில் இருந்து வில​கலாம். வில​கும் முதலீட்​டாளர்​களுக்​கு, ஏலம் எடுத்​ததற்​காக செலுத்​திய தொகையை எவ்​வித பிடித்​த​மும் இன்றி திருப்பி வழங்​கப்​படும்.

பாதிக்​கப்​பட்ட முதலீட்​டாளர்​கள் ஏலத்​தில் பங்​கேற்று இடங்​களை வாங்​கி​னால், அது அவர்​களுக்கு ஒரு தீர்வு என்ற நோக்​கில் இச்​சலுகை சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​வின்​பேரில் வழங்​கப்​படு​கிறது.

ஏலத்​தின்​போது, தொழில்​நுட்​பக் கோளாறு, சந்​தேகம் இருந்​தால் எம்​எஸ்​டிசி அலு​வலர்​களை (94990 54101, 94990 54102) தொடர்பு கொள்​ளலாம். இவ்​வாறு அதில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

‘நியோ மேக்ஸ்’ வீட்டு மனைகளை ஏலத்தில் வாங்கும் முதலீட்டாளர்களுக்கு சலுகை
மம்தா கேள்வி எழுப்பியதால்தான் தலைமை செயலாளர் மாற்றம்: அமைச்சர் கே.என்.நேரு புது விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in