அதிமுக நடிகர் ராமராஜன் தவெக வேட்பாளருக்கு பிரச்சாரம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தவெக வேட்பாளருக்கு நடிகர் ராமராஜன் வாக்கு சேகரித்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தவெக வேட்பாளருக்கு நடிகர் ராமராஜன் வாக்கு சேகரித்தார்.

Updated on
1 min read

தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளம் சட்​டப்​பேர​வைத் தொகு​திக்கு உட்​பட்ட உடை​யாம்​புளி, ஓடைமறிச்​சான், காத்​த​புரம், கண்​டபட்​டி, மருதம்​புத்​தூர், புதுப்​பட்டி உள்​ளிட்ட கிராமங்​களில் தவெக வேட்​பாளர் விபின் சக்​கர​வர்த்​திக்கு நடிகர் ராம​ராஜன் வாக்கு சேகரித்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: இந்த தேர்​தல் வித்​தி​யாச​மான தேர்​தல். இது​வரை பார்க்​காத தேர்​தல். நல்​ல​வர்​களுக்கு வாக்கு செலுத்தி அடுத்த 5 ஆண்​டு​களை பொற்​கால​மாக மாற்ற வேண்​டும். நான் தவறானவர்​களுக்கு ஆதரவு அளிக்க மாட்​டேன். ஆலங்​குளம் தொகுதி தவெக வேட்​பாளர் எனது நீண்ட கால குடும்ப நண்​பரின் மகன். அரசி​யலுக்கு அப்​பாற்​பட்​டு, நட்​புக்​காக அவருக்கு பிரச்​சா​ரம் செய்ய வந்​துள்​ளேன்.

நீண்ட இடைவெளிக்கு பின்​னர் நான் நடித்து வெளி​யான சாமானியன் திரைப்​படத்தை தமிழகம் முழு​வதும் வெளி​யிட யாரும் முன்​வ​ராத நிலை​யில் ஆலங்​குளத்​தில் டிபிவி குடும்​பத்​தினர் அவர்​களது தியேட்​டரில் 130 நாட்​கள் ஓட வைத்து வெற்​றிப்படமாக ஆக்​கி​னார்​கள். அந்த குடும்​பத்​தினர் முன்பு கேட்ட கோரிக்​கையை நிறைவேற்​று​வதற்​காகவே அவர்​களின் வாரி​சான விபின் சக்​கர​வர்த்​திக்கு ஆதரவு கேட்டு வந்​துள்​ளேன். அவர் எந்த கட்​சி​யைச் சேர்ந்​தவர் என்​பது எனக்கு முக்​கியமில்​லை.

குடும்ப நெருக்​க​மும், விசு​வாச​மும் தான் முக்​கி​யம். என் நண்​பருக்​காகவே நான் ஓட்டு கேட்க வந்​துள்​ளேன். எம்​ஜிஆர் மீது கொண்ட மரி​யாதை என் உயிர் இருக்​கும் வரை மாறாது. இவ்​வாறு அவர் பேசி​னார். அதி​முகவைச் சேர்ந்த நடிகர் ராமராஜன் தவெக வேட்​பாள​ருக்கு ஓட்டு கேட்டு பிரச்​சா​ரம் செய்​தது ஆலங்​குளம் தொகு​தி​யில்​ பரபரப்​பை ஏற்​படுத்​தியுள்​ளது.

<div class="paragraphs"><p>தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தவெக வேட்பாளருக்கு நடிகர் ராமராஜன் வாக்கு சேகரித்தார்.</p></div>
நலத்திட்டங்கள் வழங்க ஆதார் போல தமிழ்நாடு அடையாள அட்டை: விஜய் வாக்குறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in