அன்புமணிக்கு எதிரான வழக்கில் விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ராமதாஸ் மனு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அன்புமணிக்கு எதிரான வழக்கில் விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ராமதாஸ் மனு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Updated on
1 min read

சென்னை: பாமக விவ​காரம் தொடர்​பாக உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் உள்ள வழக்கு விசா​ரணைக்கு விதிக்​கப்​பட்ட தடையை நீக்​கக் கோரி ராமதாஸ் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த மனு மீதான விசா​ரணையை உயர் நீதி​மன்​றம் இன்​றைக்கு தள்ளி வைத்​துள்​ளது.

பாமக பெயர், கொடி, சின்​னத்தை அன்​புமணி பயன்​படுத்த தடை விதி்க்​கக் கோரி​யும், பாமக தலை​வ​ராக தன்னை அங்​கீகரிக்​கக் கோரி​யும் சென்னை பெருநகர உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் ராமதாஸ் தொடர்ந்​துள்ள வழக்கு விசா​ரணைக்கு உயர் நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது.

இந்த தடையை நீக்​கக்​கோரி ராமதாஸ் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனு மீதான விசா​ரணை, உயர் நீதி​மன்ற நீதிபதி டி.​வி.தமிழ்​செல்வி முன்​பாக நேற்று நடந்​தது.

அப்​போது, இந்த வழக்​கில் ஏற்​கனவே தங்​களது தரப்​பில் கேவியட் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், தடை​யுத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ள​தாக ராமதாஸ் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அதற்கு நீதிப​தி, “தற்​போது தேர்​தல் தேதி அறிவிக்​கப்​பட்டு விட்​டது. தந்​தைக்​கும், மகனுக்​கும் இடையி​லான பிரச்​சினை நாளைக்கே சரி​யாகி விடும். கட்​சியை வைத்​துத்​தான் இந்த வழக்​கில் முடிவு எடுக்க முடி​யும்.

கட்​சி​யின் பொதுச் செய​லா​ள​ரான வடிவேல் ராவணனை வழக்​கில் எதிர்​மனு​தா​ர​ராக சேர்ப்​ப​தால் என்ன பிரச்​சினை?” என கேள்வி எழுப்​பி​னார். அப்​போது வழக்​கின் ஆவணங்​கள் கோரி அன்​புமணி தரப்​பிலும் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அதையடுத்து நீதிப​தி, அனைத்து தரப்பு மனுக்​களும் நாளைக்கு (இன்​று) வி​சா​ரிக்​கப்​படும்​ என கூறி வி​சா​ரணை​யை தள்ளி வைத்தார்.

அன்புமணிக்கு எதிரான வழக்கில் விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ராமதாஸ் மனு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
தாறுமாறாக ஓடி ஆற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேருந்து: பைக் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in