வெற்றியில் மட்டுமல்ல, இக்கட்டான நேரத்திலும் உங்களுடன் இருப்பேன்: மு.க.ஸ்டாலினிடம் நெகிழ்ந்த ரஜினிகாந்த்

திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

Updated on
1 min read

சென்னை: தி​முக தலை​வர் மு.க.ஸ்​டா​லினை, நடிகர் ரஜினிகாந்த், தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா உள்ளிட்டோர் சந்​தித்​துப் பேசினர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தலில் கூட்​டணி பலத்​துடன் களமிறங்​கிய ஆளுங்​கட்​சி​யான திமுக 59 இடங்​களில் மட்​டுமே வெற்​றி​பெற்று எதிர்க்​கட்சி அந்​தஸ்​தைப் பெற்​றுள்​ளது. குறிப்​பாக அந்​தக் கட்​சி​யின் தலை​வரும், முன்​னாள் முதல்​வரு​மான மு.க.ஸ்டா​லின் மற்​றும் 14 அமைச்​சர்​கள் தோல்​வியடைந்​தது கடும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மேலும் திமுக கூட்​ட​ணியி​லிருந்து விலகி தவெக​வுடன் காங்​கிரஸ் கைகோத்​துள்​ளது.

இதற்​கிடையே திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினை, தேர்​தலில் வென்ற தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தா, மனிதநேய ஜனநாயகக் கட்​சித் தலை​வர் தமி​முன் அன்​சாரி உள்​ளிட்​டோர், சென்​னை​யில் ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் நேற்று சந்​தித்து வாழ்த்​துப் பெற்​றனர்.

தொடர்ந்து தமி​முன் அன்​சாரி செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “எனக்கு வாக்​களித்த மக்​களுக்கு நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன். என் வெற்​றிக்கு ஸ்டா​லின்​தான் காரணம். ஸ்டா​லினை சந்​தித்து வாழ்த்து பெற்​றேன். அப்​போது நீங்​கள் மீண்​டும் சட்​டப்​பேர​வைக்கு வர வேண்​டுமென கூறினேன். இதற்​காக நான் வெற்றி பெற்ற சிதம்​பரம் தொகு​தி​யில் கூட ராஜி​னாமா செய்​கிறேன் என்​றேன். ஆனால் அவரோ, அப்​படி​யெல்​லாம் பேசக்​கூ​டாது எனக் கூறி​விட்​டார். தொகுதி மக்​களுக்கு கொடுத்த வாக்​குறு​தி​களை ஒன்​றன்​பின் ஒன்​றாக நிறைவேற்​று​வேன்” என்று தெரி​வித்​தார்.

இதுத​விர நடிகர் ரஜினி​காந்த், ஸ்டா​லினை அவரது இல்​லத்​தில் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது, ``நெருங்​கிய நண்​ப​ரான தங்​களின் வெற்றி நேரத்​தில் மட்​டுமல்ல, இக்​கட்​டான சூழ்​நிலை​யிலும் உங்​களு​டன் இருப்​பேன்'' என்று அவரிடம் ரஜினி​காந்த் தெரி​வித்​த​தாக​வும் கூறப்​படு​கிறது.

தற்​போதைய பரபரப்​பான அரசி​யல் சூழலில் ஸ்டா​லினை, நடிகர் ரஜினி​காந்த் சந்​தித்​துள்​ளது முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக பார்​க்​கப்​படுகிறது.

<div class="paragraphs"><p>திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்</p></div>
தவெகவை காங்கிரஸ் ஆதரிப்பது துரோகம்: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடும் தாக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in