தவெகவை காங்கிரஸ் ஆதரிப்பது துரோகம்: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடும் தாக்கு

தவெகவை காங்கிரஸ் ஆதரிப்பது துரோகம்: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடும் தாக்கு
Updated on
1 min read

சென்னை: தவெக கூட்​ட​ணிக்கு காங்​கிரஸ் சென்​றது திமுக தலை​மையி​லான ஆட்சி அமை​யும் என்று நம்பி வாக்​களித்த மக்​களுக்கு செய்த துரோகம் என்று அந்த கட்​சி​யின் பொருளாள​ரும், எம்​பி​யு​மான டி.ஆர்​.​பாலு குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து திமுக பொருளாளர் டி.ஆர்​.​பாலு வெளி​யிட்ட அறிக்கை: அகில இந்​திய காங்​கிரஸ் கட்சி சார்​பில் வெளி​யான அறிக்​கை, சில காலம் மறைந்​திருந்த அவர்​களின் குணத்தை வெளிக்​காட்​டி​யுள்​ளது. எப்​போதெல்​லாம் காங்​கிரசுக்கு இக்​கட்​டான சூழலும் நெருக்​கடி​யும் உண்​டானதோ, அப்​போதெல்​லாம் உற்​றத் தோழமை​யாக உடனிருந்​தது திமுக. அதற்​காக நாங்​கள் கொடுத்த விலை அதி​கம். ஆனால், அவற்றை இன்​முகத்​தோடு ஏற்​றோம். இன்று கூட்​டணி முறிந்​து​விட்​ட​தாக காங்​கிரஸ் கூறியதை செய்​தி​களில் பார்த்​த​போது ஏனோ திகைப்பு ஏற்​பட​வில்​லை.

மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யில் பெரும்​பான்மை இடங்​களைப் பெற்​று, தேர்​தலைச் சந்​தித்​து, கூட்​ட​ணிக் கட்​சித் தொண்​டர்​களின் உழைப்​பால் வெற்றி பெற்ற 5 எம்​எல்​ஏக்​களை பணயம் வைத்து கயமை​யுடன் மாற்று அணிக்​குச் சென்​றுள்​ளனர். பெரிய அரசி​யல் ராஜதந்​திர முடிவை எடுத்​தது போல அதற்கு கொள்கை முலாம் பூசி நியாயப்​படுத்த காங்​கிரஸ் கட்சி முயல்​கிறது. இது திமுக தலை​மையி​லான ஆட்சி அமை​யும் என்று நம்பி வாக்​களித்த மக்​களுக்கு செய்த பச்​சைத் துரோகம்.

குறுக்கு வழி​யில் அதி​காரத்தை அடைய பாஜக பல்​வேறு மாநிலங்​களில் எதைச் செய்​கிறதோ, அதையே காங்​கிரஸ் கட்சி தமிழகத்​தில் செய்​துள்​ளது. நாடாளு​மன்​றத்​துக்கு உள்​ளே​யும் வெளி​யே​யும் கொள்கை ரீதி​யாக​வும், உணர்​வுப்​பூர்​வ​மாக​வும் தோளோடு தோள் நின்ற இயக்​கம் திமுக. தோல்வி எங்​களுக்கு புதிதல்ல, துரோக​மும் எங்​களுக்கு புதிது அல்ல, ஆனால், அவை நிரந்​தரம் அல்ல என்​பதும் எங்​களுக்கு தெரி​யும். காலம் பதில் சொல்​லும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

முதுகில் குத்தும் செயல்: தவெக​வுக்கு ஆதரவு அளிப்​பது என்ற காங்​கிரஸ் கட்​சி​யின் நிலைப்​பாடு மிக​வும் குறுகிய பார்வை கொண்​டது. இப்​படி ஒரு முடிவை எடுத்​தமைக்​காக அவர்​கள் வருந்த நேரிடும். தேர்​தல் முடிவு​கள் வெளி​யாகி ஒரு​நாள்​தான் ஆகிறது. அதற்​குள் காங்​கிரஸ் தவெக​வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்​தது முதுகில் குத்​தும் செய​லாகும். பாஜக, ஆர்​எஸ்​எஸ் ஆகிய​வற்​றுக்கு இடம்தர விரும்​பாத​தால், இந்த முடிவை எடுப்​ப​தாக காங்​கிரஸ் கூறுகிறது. ஆனால் இந்த முடிவு இண்​டியா கூட்​ட​ணி​யில் உள்ள பிற கட்​சிகளிடையே பெரும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தும்.

மக்​கள் அளித்த தீர்ப்​புக்கு எதி​ராக அவர்​கள் செயல்​படு​கிறார்​கள். காங்​கிரஸ் கட்சி மிகத் தவறான ஒரு முடிவை எடுத்​து​விட்​ட​தாக நான்​ கருதுகிறேன்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

தவெகவை காங்கிரஸ் ஆதரிப்பது துரோகம்: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடும் தாக்கு
விஜய்யுடன் தலைமைச் செயலர், டிஜிபி முக்கிய ஆலோசனை: அரசு நலத் திட்டங்கள் குறித்து விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in