ஜன.26-ம் தேதி வரை மழை வாய்ப்பு

ஜன.26-ம் தேதி வரை மழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலோர தமிழகத்தில் இன்று (ஜன.23) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

24-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய் யக்கூடும். 25-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். 26-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

ஜன.26-ம் தேதி வரை மழை வாய்ப்பு
642 துணை சுகாதார நிலையங்கள் விரைவில் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in