642 துணை சுகாதார நிலையங்கள் விரைவில் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

642 துணை சுகாதார நிலையங்கள் விரைவில் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் விரைவில் 642 துணை சுகாதார நிலையங்கள் திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, பேராவூரணி எம்எல்ஏ அசோக் குமார், ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகய்யா, பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆகியோர் சுகாதாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துப் பேசியதாவது: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தென்னிலை கிராமத்தில் 8 கி.மீ. தொலைவில் க.பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையமும், 11 கி.மீ. தொலைவில் வெள்ளக் கோவில் அரசு மருத்துவமனையும் செயல்பட்டு வருகின்றன.

தற்போது தென்னிலை கிராமத்தில் ரூ.45 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி விரைவில் முடிவடையும். பேராவூரணி அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே ரூ.5 கோடி செலவில் கட்டிடப் பணிகள் நடைபெற்று, முடிவடையும் தருவாயில் இருக்கிறது. விரைவில் முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.

ஐந்தாயிரம் மக்கள்தொகை அடிப்படையில் ஒரு துணை சுகாதார நிலையம் அமைக்கப்படுகிறது. கடந்த நிதிநிலை அறிக்கையில் 642 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் அமையும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தப் பணிகள் முடிவுற்று, இன்னும் 10 நாட்களில் முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளார்.

பாபநாசம் தொகுதி வீரமாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேவையான 25 கேவி மின்மாற்றி மற்றும் இதர உபகரணங்கள் உள்ளிட்ட, எம்எல்ஏ கேட்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

642 துணை சுகாதார நிலையங்கள் விரைவில் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஆபரேஷன் சிந்தூரின்போது எதிரிகளை பிரம்மோஸ் ஏவுகணை சாய்த்தது: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பெருமிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in