43 வேட்பாளர்களை அறிவித்தது 'புதிய தமிழகம்' - ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டி

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
Updated on
1 min read

சென்னை: ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் நெல்லை தொகுதிகளில் அவரது மகன் ஷியாம் கிருஷ்ணசாமியும் போட்டியிடுகின்றனர்.

புதிய தமிழகம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் 43 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமியும், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் நெல்லை தொகுதிகளில் ஷியாம் கிருஷ்ணசாமியும் போட்டியிடுகின்றனர். மேலும், வாசுதேவ நல்லூரில் பால்ராஜ், கடைய நல்லூரில் கவி, நாங்குநேரியில் தமிழ்செல்வி, நிலக்கோட்டையில் பொ.சங்கர், பட்டுக்கோட்டையில் மா.குருமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருவெறும்பூரில் அ.பிச்சைமுத்து, ஆண்டிப்பட்டியில் மகா.இளையராஜா, முசிறியில் மு.சின்னையன், திருவாரூரில் மூ.தியாகராஜன், நன்னிலத்தில் மு.தமிழ்செல்வம், விராலிமலையில் அ.செல்வராஜ், சாத்தூரில் சு.வேல்முருகன் உள்ளிட்ட 43 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திவந்த புதிய தமிழகம் கட்சி, தொகுதிகள் எண்ணிக்கை குறித்த இழுபறியால் தனித்துப் போட்டியிட முடிவு செய்து களமிறங்கியுள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக விஜய் போட்டி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in