50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் முகாம்
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated on
2 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​கள், அங்​கன்​வாடி மையங்​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், பள்​ளி​கள் என மொத்​தம் 43,051 மையங்​களில் 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகள் சுமார் 50 லட்​சம் பேருக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்​டது. சென்னை பால​வாக்​கத்​தில் குழந்​தைகளுக்கு சொட்டு மருந்து வழங்​கி, முகாமை முதல்​வர் விஜய் தொடங்கி வைத்​தார்.

இந்​தி​யா​வில் போலியோவை (இளம்​ பிள்ளை வாதம்) ஒழிப்​ப​தற்​காக 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகளுக்கு ஆண்​டு​தோறும் 2 தவணை​களில் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்டு வந்​தது. இதையடுத்​து, போலியோ ஒழிக்​கப்​பட்ட நாடு​கள் பட்​டியலில் இந்​தி​யா​வும் சேர்ந்​துள்​ளது. இதன்​பிறகு, போலியோ பாதிப்பு மீண்​டும் ஏற்​ப​டா​மல் தடுக்​கும் வித​மாக, ஆண்​டுக்கு ஒரு​முறை மட்​டும் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​படு​கிறது. அதன்​படி, இந்த ஆண்​டுக்​கான தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழு​வதும் நேற்று நடை​பெற்​றது.

தமிழகத்​தில் 5 வயதுக்கு உட்​பட்ட 52.91 லட்​சம் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், அரசு மருத்​து​வ​மனை​கள், அங்​கன்​வாடி மையங்​கள், சத்​துணவு மையங்​கள், பள்​ளி​கள் உட்பட மொத்​தம் 43,051 மையங்​களில் முகாம் அமைக்​கப்​பட்​டிருந்​தது.

சென்னை பால​வாக்​கத்​தில் உள்ள அரசு ஆதி​தி​ரா​விடர் நல உயர்​நிலைப் பள்​ளி​யில் நடை​பெற்ற முகாமில் முதல்​வர் விஜய் கலந்​து​கொண்​டு, குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்​கி​யும், அவர்​களுக்கு பிடித்த ‘டெடி பியர்’ பொம்​மை​களை பரி​சாக கொடுத்​தும் போலியோ சொட்டு மருந்துமுகாமைத் தொடங்கி வைத்​தார்.

சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகா​தா​ரம், நோய்த் தடுப்பு மருந்துதுறை இயக்​குநர் சோமசுந்​தரம், சோழிங்​கநல்​லூர் தொகுதி எம்​எல்ஏ சரவணன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். வில்​லி​வாக்​கம் தொகு​திக்கு உட்​பட்ட ராஜமங்​கலம் அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யம், அயனாவரம் மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் குழந்​தைகளுக்கு அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா போலியோ சொட்டு மருந்து வழங்​கி​னார்.

தமிழகம் முழு​வதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடை​பெற்​றது. பெற்​றோர் தங்​களது குழந்​தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்​டுச் சென்றனர். அழுது அடம்​பிடித்த குழந்​தைகளுக்கு விளை​யாட்டு காட்​டி​யும், சாக்​லேட், பொம்​மை​கள் வழங்​கி​யும் மருந்து வழங்​கப்​பட்​டது.

பயணத்​தில் இருக்​கும் குழந்​தைகளின் வசதிக்​காக பேருந்​து, ரயில், விமான நிலை​யங்​கள், சோதனைச் சாவடிகளி​லும் மையங்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தது. தொலை​தூரம் மற்​றும் எளி​தில் வந்து செல்ல முடி​யாத பகு​தி​களுக்கு நடமாடும் குழு​வினர் சென்​று, அங்​குள்ள குழந்​தைகளுக்கு சொட்டு மருந்து வழங்​கினர். இந்த பணி​யில் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக​னங்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டன.

பிற மாநிலங்​களில் இருந்து வந்து தமிழகத்​தில் வசிப்​பவர்​களின் குழந்​தைகளுக்​கும் மருந்து வழங்​கப்​பட்​டது. விடு​படும் குழந்​தைகளை அடை​யாளம் காண, சொட்டு மருந்து வழங்​கப்​பட்ட குழந்​தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்​கப்​பட்​டது. தமிழகம் முழு​வதும் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்​கும் பணி​யில் சுகா​தா​ரப் பணி​யாளர்​கள், அங்​கன்​வாடி பணி​யாளர்​கள், ஆசிரியர்​கள், தன்​னார்​வலர்​கள் என 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் ஈடு​படுத்​தப்​பட்​டனர். சென்​னை​யில் 5 வயதுக்கு உட்​பட்ட 5.56 லட்​சம் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,646 மையங்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. இப்​பணி​யில் 6,564 பேர் ஈடு​பட்​டனர்.

சென்னையில் 5 லட்சம் குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 50 லட்​சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்​பட்​டுள்​ளது. விடு​பட்ட குழந்​தைகளுக்கு ஒரு வாரத்​துக்​குள் செவிலியர்​கள்​ வீடு வீடாக வந்​து சொட்​டு மருந்​து வழங்​கு​வார்​கள். இன்​றும், நாளை​யும் தற்​காலிக மையங்​களில் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது என்​று அதிகாரிகள் தெரி​வித்​தனர்.

<div class="paragraphs"><p>சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p></div>
சீஷெல்ஸ் நாட்டுடன் கல்வி, பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in