‘வெள்ள தடுப்புக்கான திருப்புகழ் குழு அறிக்கையை தவெக அரசு வெளியிட வேண்டும்’ - பெ.சண்முகம்

பெ.சண்முகம்

பெ.சண்முகம்

Updated on: 
1 min read

சென்னை: மாநில அரசு உடனடியாக திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுவதும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் மிகவும் அவசர, அவசியமான தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மழைக் காலத்தில் வெள்ளம் ஏற்படுவதும் அதையொட்டி வெள்ளத் தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து தீவிரமாக விவாதிப்பதுமாக ஒவ்வொரு ஆண்டும் கடந்து கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக திருப்புகழ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆயினும், அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை.

அந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டுமென்று கடந்த காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வந்துள்ளன. இடைக்கால அறிக்கைகள் உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட அறிக்கைகளை இந்த குழு சமர்ப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வசதி படைத்தோரின் ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதும் முக்கியம் என்று சொல்லப்பட்டிருப்பதால் இந்த அறிக்கை வெளியிடப்படாமல் தடை செய்யப்பட்டிருக்கிறதோ என்கிற கேள்வியும் எழுகிறது.

கடந்த திமுக ஆட்சியில் வெளியிடப்படாத அந்த அறிக்கையை தற்போதைய ஆட்சியிலாவது வெளியிட வேண்டும். மக்களின் வரிப் பணத்தை செலவழித்து நிபுணர்கள் தங்கள் உழைப்பையும், அறிவையும் செலுத்தி உருவாக்கிய ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு என்ன தடை இருக்க முடியும்?

எனவே, மாநில அரசு உடனடியாக திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுவதும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் மிகவும் அவசர, அவசியமான தேவை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பெ.சண்முகம்</p></div>
அன்புமணிக்கு கால் மூட்டில் அறுவை சிகிச்சை - பாமக தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in