நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து கடலூர், சிதம்பரத்தில் போராட்டம்

நீட் தேர்வு குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக்கோரி, சிதம்பரத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வு குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக்கோரி, சிதம்பரத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated on
1 min read

கடலூர்: நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான பதவி விலகக்கோரியும், நீட் குளறுபடிகளை கண்டித்தும் டெல்லி மற்றும் தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசைக் கண்டித்தும் சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழக வாயில் முன் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர தலைவர் சிவநந்தினி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செளமியா, மாநிலக் குழு சபரி, மாவட்ட துணைத் தலைவர் மதிவாணன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் ஜவான்ஸ் பவன் அருகில் நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்தும், மத்திய அமைச்சரை பதவி விலகக்கோரியும், ஐந்தர்மந்தர் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்தும் சிஐடியூ, விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிஐடியூ மாவட்டசெயலாளர் பழனிவேல் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே விசிக சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு முற்போக்கு மாணவர் கழக மாநில செயலாளர் ராஜீவ் தலைமை தாங்கினார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் கலைமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

<div class="paragraphs"><p>நீட் தேர்வு குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக்கோரி, சிதம்பரத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p></div>
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் அரசியல் தலைவர்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in