நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் அரசியல் தலைவர்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல்

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் அரசியல் தலைவர்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: நீட் தேர்​வுக்கு எதி​ராக நடத்​தப்​படும் போராட்​டங்​களில் அரசி​யல் தலை​வர்​கள் குறித்து தனிப்​பட்ட விமர்​சனம் செய்ய வேண்​டாம் என இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் அனைத்​திந்​திய இளைஞர் பெரு​மன்ற மாநிலத் தலை​வர் இரா.தமிழ்​பெரு​மாள், மாநிலச் செய​லா​ளர் க.பாரதி ஆகியோர் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நீட் தேர்வு ரத்து செய்​யப்பட வேண்​டும், நீட் தேர்வு முறை​கேட்​டுக்​குப் பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும். இதை வலி​யுறுத்தி டெல்​லி​யில் போராட்​டம் நடத்​திய இளைஞர்​கள் மீது தாக்​குதல் நடத்​திய காவல்​துறை அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்​கவேண்​டும்.

இந்த 3 முக்​கிய கோரிக்​கைகளை முன்​வைத்து தான் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தலைமை அலு​வல​க​மாக பாலன் இல்​லத்​தில் கரப்​பான் பூச்சி ஜனதா கட்சிசார்​பில், அனைத்​திந்​திய இளைஞர் பெரு​மன்​றம் உட்பட பல்​வேறு முற்​போக்கு இளைஞர் மாணவர் அமைப்​பு​களின் ஆதர​வுடன் கடந்த 4 நாட்​களாக தொடர் காத்​திருப்பு போராட்​டம் நடை​பெற்று வரு​கிறது.

இந்த போராட்​டத்​துக்கு பல்​வேறு தரப்​பினரும் வருகை தந்து ஆதரவு தெரி​வித்து வரு​கின்​றனர். இவ்​வாறு வருகை தரும் அமைப்​பினர் உரை​யாற்​றும்​போது கோரிக்​கை​களின் நோக்​கங்​கள், அதற்கு காரண​மானவர்​கள் மீது நடவடிக்கை தொடர்​பாக மட்​டும் பேசி​னால், தமிழகத்​தின் அனைத்து அரசி​யல் கட்​சிகளில் உள்ள இளைஞர்​களும், மாணவர்​களும் பேராதரவு தரு​வார்​கள்.

பாஜகவை தவிர்த்து தமிழகத்​தில் உள்ள அனைத்து அரசி​யல் கட்​சிகளும் நீட் எதிர்ப்​பில் உறு​தி​யாக உள்​ளார்​கள் என்​பதை மத்​திய அரசும் உணரும். எனவே தங்​களது உரைகளில் தனிப்​பட்ட அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் குறித்து விமர்​சனம் செய்ய வேண்​டாம் என கேட்​டுக்​கொள்​கிறோம். இவ்​வாறு அவர்​கள் வலி​யுறுத்​தி​உள்​ளனர்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் அரசியல் தலைவர்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல்
கோயம்பேடு பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in