திருப்போரூர் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு: நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் நடவடிக்கையை எதிர்த்து மறியல்

திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். (உள்படம்) ஆக்கிரப்பு பகுதியில் அறிவிப்பு பலகை வைத்த அறநிலையத்துறையினர்.

திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். (உள்படம்) ஆக்கிரப்பு பகுதியில் அறிவிப்பு பலகை வைத்த அறநிலையத்துறையினர்.

Updated on
1 min read

திருப்போரூர்: நீ​தி​மன்ற உத்​தர​வுப்​படி திருப்போரூர் முரு​கன் கோயிலுக்கு சொந்​த​மான நிலத்​தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்​கொண்​டதற்கு எதிர்ப்பு தெரி​வித்து விவ​சா​யிகள், பொது​மக்​கள் மற்​றும் அரசி​யல் கடசி​யினர் மறியல் மற்​றும் போராட்​டங்​களில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

திருப்போரூர் கந்​த​சாமி கோயிலுக்கு சொந்​த​மான நிலங்​கள் தனி நபர்​கள் இடத்​தில் இருப்​ப​தாக​வும், அவற்றை மீட்டு கோயில் நிர்​வாகத்​தின் கீழ் கொண்டு வர வேண்​டும் என்​றும் கூறி, சென்​னையைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஜெகன்​னாத் என்​பவர் கடந்த 2020-ம் ஆண்​டு, சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​தார்.

பல வருடங்​களாக இவ்​வழக்கு நடை​பெற்று வந்த நிலை​யில், நிலங்​களை தனி நபர்​களிட ​மிருந்து மீட்க வேண்​டும் என்று உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டது. ஆனால், பல்​வேறு காரணங்​களாலும், பொது​மக்​கள் எதிர்ப்​பாலும் இப்​பணி தாமத​மானது.

இதையடுத்​து, நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த உயர்​நீ​தி​மன்​றம் 21 நாட்​களுக்​குள் கோயில் நிலங்​களை மீட்டு சுவாதீனம் எடுக்க வேண்​டும் என்று உத்​தர​விட்​டது.

இதைத் தொடர்ந்​து, அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் குமாரதுரை, உதவி ஆணை​யர்​கள், அறநிலை​யத்​துறை செயல் அலு​வலர் குமர​வேல் ஆகியோர் அடங்​கிய குழு​வினரும், வரு​வாய்த்​துறை கூடு​தல் வட்​டாட்​சி​யர் பார்​வதி மற்​றும் வரு​வாய் ஆய்​வாளர்​கள், கிராம நிர்​வாக அலு​வலர்​கள் அடங்​கிய குழு​வினரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று நடவடிக்கை மேற்கொண்டனர்.

பொக்​லைன் இயந்​திரம் மூலம் கோயில் நிர்​வாகத்​தின் பெயர் பலகையை வைக்க முற்​பட்​ட​போது விவ​சாய நிலங்​களை குத்​தகைக்கு எடுத்​திருந்​தவர்​கள், நிலங்​களை அனுப​வித்து வருபவர்​கள், பொது​மக்​கள், விவ​சா​யிகள், அரசி​யல் கட்​சி​யினர், தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தினர் உள்​ளிட்ட பல்​வேறு தரப்​பினர் திரண்டு வந்து தடுத்து நிறுத்​தினர்.

இந்த விவ​சாய நிலங்​கள் யாருக்​கு சொந்​தம் என்று கேட்டு நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்து இருப்​ப​தாக​வும், வழக்​கின் தீர்ப்பு வரும் வரை ஆக்கிரமிப்பு அகற்​றும் முடிவை கைவிட வேண்​டும் என்​றும் கோஷமிட்​டனர்.

இதனிடையே சிலர், விவ​சாய நிலங்​களில் நடப்​பட்ட கோயில் நிர்​வாகத்​தின் பெயர் பலகைகளை அடித்து உடைத்​து, பேனர்​களை கிழித்து எறிந்​தனர். மேலும், ஏராள​மான ஆண்​களும், பெண்​களும் நெம்​மேலி சாலை​யில் அமர்ந்து மறியலில் ஈடு​பட்​டனர்.

இதைத் தொடர்ந்​து, அதி​காரி​கள் முன்​னிலை​யில் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இதில் பொது மக்​களுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்​கு​வது என்​றும், அதற்​குள் முடிவு ஏற்​பட​வில்லை எனில் ஆக்கிரமிப்புகள் அகற்​றப்​படும் என கோயில் நிர்​வாகத்​தினர் தெரி​வித்​தனர். இதை இரு தரப்​பும் ஏற்​று அதற்​கான ஆவணங்​களில்​ கையெழுத்​திட்​டு கலைந்​து சென்​றனர்​.

<div class="paragraphs"><p>திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். (உள்படம்) ஆக்கிரப்பு பகுதியில் அறிவிப்பு பலகை வைத்த அறநிலையத்துறையினர்.</p></div>
மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி இளைஞர் தீக்குளிப்பு: போலீஸார் விசாரணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in