மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி இளைஞர் தீக்குளிப்பு: போலீஸார் விசாரணை

மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி இளைஞர் தீக்குளிப்பு: போலீஸார் விசாரணை
Updated on
1 min read

சென்னை: மாநில மனித உரிமை ஆணைய அலு​வல​கத்​தில் தீக்​குளித்த மாற்​றுத் திற​னாளி இளைஞ​ரால் பரபரப்பு ஏற்​பட்​டது. விருதுநகரைச் சேர்ந்​தவர் ஆல்​பர்ட்​(30). மாற்று திற​னாளி​யான இவர், தற்​காலிக​மாக சென்னை வேளச்​சேரி வெங்​கடேஸ்​வரா நகர் பகு​தி​யில் தங்கி உள்​ளார்.

இந்​நிலை​யில், இவர் பசுமை வழிச்​சாலை​யில் உள்ள மாநில மனித உரிமை​கள் ஆணை​யத்​தில் புகார் மனு அளிப்​ப​தற்​காக நேற்று காலை சென்​றுள்​ளார். அப்​போது, அங்கு அவர் தனக்​குத்​தானே பெட்​ரோல் ஊற்றி தீ வைத்​துக் கொண்​டார்.

வலி​யால் துடித்த அவரது அலறல் சத்​தம் கேட்​டு, அங்கு பணி​யில் இருந்த போலீஸார் தீயணைப்​பான் மூலம் தீயை அணைத்​தனர். பின்​னர், உடனடி​யாக அவரை ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

பின்​னர் மேல் சிகிச்​சைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்லப்​பட்​டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. அவர் தற்​கொலைக்கு முயன்ற காரணம் குறித்து அபி​ராமபுரம் போலீஸார் விசா​ரிக்கின்​றனர்.

இதற்​கிடையே, ஆல்​பர்ட் மீது 2 மாதங்​களுக்கு முன்​னர் விருதுநகர் மாவட்​டத்​தைச் சேர்ந்த ஆதி​குரு லட்​சுமி என்ற பெண் அங்​குள்ள சைபர் க்ரைம் காவல் நிலை​யத்​தில் புகார் ஒன்று அளித்​திருந்​தார்.

அதில், ஆல்​பர்ட்​டுடன் வர்த்தக முதலீடு செய்​வதற்கு ரூ.1.75 லட்​சம் கொடுத்​த​தாக​வும், அதனை அவர் திருப்​பித் தரவில்லை எனவும் தெரி​வித்​திருந்​தார்.

அதைத்​தொடர்ந்​து, பணத்தை ஜன.27-ம் தேதி திருப்பி வழங்​கு​வ​தாக உறுதி அளித்து அந்​தப் பெண்​ணுக்கு ஆல்​பர்ட் எழு​திக் கொடுத்​துள்​ளார். ஆனால், குறிப்​பிட்ட தேதிக்​குள் பணத்தை திருப்பி வழங்​க​வில்​லை.

எனவே, இந்த விவ​காரம் தொடர்​பாக போலீஸார் நெருக்கடி கொடுத்​த​தால் ஆல்​பர்ட் தீக்​குளித்து தற்​கொலைக்கு முயன்​றா​ரா? அல்​லது வேறு ஏதேனும் காரணம் உள்​ளதா என்​பது குறித்​து போலீஸார்​ வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி இளைஞர் தீக்குளிப்பு: போலீஸார் விசாரணை
சென்னை | ஐ.டி. ஊழியர் வீட்டில் திருடிய அண்ணன், தம்பி கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in